Shadow

Songs

ஜீவன் நீயே | மார்டின் படப்பாடல்

ஜீவன் நீயே | மார்டின் படப்பாடல்

Songs, அயல் சினிமா, காணொளிகள்
மார்டின் படத்தின் முதல் சிங்கிளான "ஜீவன் நீயே" பாடல் வெளியாகியுள்ளது. ஆக்ரா, ஜோத்பூர், காஷ்மீர், பாதாமி போன்ற இந்தியாவின் மிக மிக முக்கியமான இடங்களில் படமாக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடல், சத்யா ஹெக்டேயின் ஒளிப்பதிவில், கண்களுக்கு விருந்தாக உள்ளது. இம்ரான் சர்தாரியாவின் அற்புதமான நடன இயக்கத்தில், இந்தப் பாடலில், காதலின் சாரத்தை அழகாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. புகழ்பெற்ற இசையமைப்பாளர் மணி ஷர்மா இசையமைப்பில், ஐந்து மொழிகளிலும் இசை ரசிகர்களை, மயக்கும்படி இந்தப் பாடல் அமைந்துள்ளது. பாடலாசிரியர் விவேகாவின் அருமையான வரிகள், காதலின் பல கோணங்களை அழகாக எடுத்துக் காட்டுகிறது. ஹரிசரண் மற்றும் ஸ்ருத்திகா ஆகியோரின் அற்புதமான குரல்களில் இப்பாடல் மனதை மயக்குகிறது.துருவா சர்ஜா நடிப்பில் உருவாகியுள்ள 'மார்டின்' படம் கன்னட சினிமாவிலிருந்து வெளிவரும் மிகப் பெரிய அதிரடி முயற்சியாக, இந்திய சினிமாவில் ...
கனா காணும் காலங்கள் – சீசன் 3 ஆகஸ்ட் 30 முதல்

கனா காணும் காலங்கள் – சீசன் 3 ஆகஸ்ட் 30 முதல்

OTT, Songs, Web Series, காணொளிகள்
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், இளமைக் கால நினைவுகளைப் போற்றும், பொழுதுபோக்கு சீரிஸான "கனா காணும் காலங்கள்" சீரிஸின் மூன்றாவது சீசனை, ஆகஸ்ட் 30 முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இந்தத் சீரிஸின் ஸ்ட்ரீமிங் தேதியை, இந்த சீரிஸில் நடித்துள்ள அனைத்து நடிகர்களும் பங்கு பெற்ற 'நியூ ஏஜ் நியூ பேட்ச்' எனும் அட்டகாசமான பெப்பி பாடலை வெளியிட்டு, அறிவித்துள்ளது.கென் ராய்சன் இயக்கிய இந்தப் பாடலை, ஆனந்த் அரவிந்தாக்ஷன் மற்றும் ரக்ஷிதா சுரேஷ் பாடியுள்ளனர். அரவிந்த் அன்னெஸ்ட், ஷிபி சீனிவாசன், விக்ரம் பிட்டி, ஆர்த்தி அஷ்வின், கவிதா மற்றும் ஸ்ரீ ராதா ஆகியோர் அடங்கிய குழுவினர் குரல் கொடுத்துள்ளனர். ஒளிப்பதிவு - AJ திப்பு நடன இயக்கம் - அப்சர் இசை - ஃபுளூட் நவின் 'கனா காணும் காலங்கள்' முதலில் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒரு சீரியலாக ஒளிபரப்பப்பட்டது. பள்ளி மாணவர்க...
தேவரா | பயத்தின் கடவுள் | அநிருத்

தேவரா | பயத்தின் கடவுள் | அநிருத்

Songs, அயல் சினிமா, காணொளிகள்
மாஸ் நாயகன் என்டிஆரின் 'தேவரா' திரைப்படத்தில் இருந்து அநிருத் ரவிச்சந்தர் இசையில் முதல் சிங்கிள் 'ஃபியர் சாங்' (fear song) தற்போது வெளியாகியுள்ளது. மாஸ் நாயகன் என்டிஆர் நடித்த 'தேவரா' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழு வேகத்தில் நடந்து வருகிறது. கொரட்டாலா சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படம் உலக அளவில் பார்வையாளர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் அழகி ஜான்வி கபூர் நாயகியாக நடிக்கிறார். மற்றொரு பாலிவுட் நட்சத்திரமான சைஃப் அலிகான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இப்படத்தின் முதல் பாகமான 'தேவரா பார்ட் 1' தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் அக்டோபர் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்படத் திட்டமிடப்பட்டுள்ளது. என்டிஆர் பிறந்தநாள் கொண்டாட்டமாகப் படத்தில் இருந்து 'ஃபியர் சாங்' எனத் தலைப்பிடப்பட்டுள்ள முதல் ...
‘களவாணி பசங்க’ பாடல் | கள்வன்

‘களவாணி பசங்க’ பாடல் | கள்வன்

Songs, காணொளிகள், சினிமா
ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில், பிவி ஷங்கர் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் குமார், இவானா மற்றும் பாரதிராஜா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள 'கள்வன்' திரைப்படம் ஏப்ரல் 4, 2024 அன்று வெளியாகவுள்ளது. இந்தப் படத்திற்கு பின்னணி இசையமைத்துள்ளார் ரேவா. இந்தப் படத்தில் இருந்து ‘களவாணி பசங்க’ என்ற நான்காவது சிங்கிள் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் பாடலுக்கு ஏகாதேசி பாடல் வரிகள் எழுதியுள்ளார். அந்தோணிதாசன் இந்தப் பாடலைப் பாடியுள்ளார். 'குவாட்டர் தெனம் வாங்கப் போறேன்...' எனத் தொடங்கியுள்ள இந்தப் பாடல் வெளியான உடனேயே பல லட்சம் பார்வைகளைக் கடந்து ரசிகர்களின் மனதைக் கவர்ந்துள்ளது.இந்தப் படத்தை முன்னணி ஒளிப்பதிவாளர் பி.வி.சங்கர் இயக்கியுள்ளார். ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி ஜி டில்லி பாபு தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் நக்கலைட்ஸ் டீம் ஜென்சன் திவாகர், பி...
‘மதுரமு கதா’ பாடல் | ஃபேமிலி ஸ்டார்

‘மதுரமு கதா’ பாடல் | ஃபேமிலி ஸ்டார்

Songs, அயல் சினிமா, காணொளிகள்
விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாகூர் நடிப்பில் உருவாகி வரும் "தி ஃபேமிலி ஸ்டார்" திரைப்படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடலான 'மதுரமு கதா' பாடலின் லிரிகல் வீடியோ, ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தை முன்னிட்டு, ஹைதராபாத்தில் உள்ள ‘மை ஹோம் ஜூவல் கேட்டட் கம்யூனிட்டி’யில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நாயகன் விஜய் தேவரகொண்டா, நாயகி மிருணாள் தாகூர், தயாரிப்பாளர் தில் ராஜு ஆகியோர் கலந்து கொள்ள, ‘மை ஹோம் ஜூவல்’ குடும்பத்தினர் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். ஹோலி பண்டிகை நாடகம், நடனம் மற்றும் திரைப்படக் குழுவினருடன் புகைப்படங்கள் எனக் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. தயாரிப்பாளர் தில் ராஜு, "எங்கள் 'தி ஃபேமிலி ஸ்டார்' படக்குழுவை உற்சாகமாக வரவேற்ற அனைத்து குடும்பங்களுக்கும் நன்றி. 'தி ஃபேமிலி ஸ்டார்' திரைப்படம் வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி வெளியாகிறது. 'தி ஃபேமிலி ஸ்டார்' என்றால் என்ன என்பதை அ...
Folk Marley Records – அந்தோணிதாசனின் ஆடியோ கம்பெனி

Folk Marley Records – அந்தோணிதாசனின் ஆடியோ கம்பெனி

Songs, காணொளிகள், சமூகம்
பாடகரும் இசையமைப்பாளருமான அந்தோணிதாசன், கவனிக்கப்படாத நாட்டுப்புறப் பாடகர்கள் மற்றும் கலைஞர்களுக்காக, ’ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ் (Folk Marley Records)' என்னும் புதிய ஆடியோ கம்பெனியைத் தொடங்கியுள்ளார். நாட்டுப்புறக் கலைஞராகப் பாடகராகத் தென் தமிழகத்தில் அறியப்பட்டவர்கள் அந்தோணிதாசனும், ரீத்தா அந்தோணியும். தனது கடின உழைப்பால் அந்தோணிதாசன் இன்று சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து மக்கள் மனதிலும் இடம் பிடித்திருக்கிறார். கரகாட்டக் கலைஞர், நாட்டுப்புறப் பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், நடிகர் என தனது கலைப்பயணத்தை வெற்றிகரமாகப் பயணித்துக் கொண்டிருக்கிறார். தான் கடந்துவந்த பாதையை மறக்காமல் தன்னைப் போலவே திறமைகள் இருந்தும் சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் இருக்கும் கலைஞர்களுக்காக ஒரு தளத்தை உருவாக்கி அதன் மூலமாக வெளிச்சம் பெறாத கலைஞர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கவேண்டும் என்கிற நோக்கி...
“ஜெய் பாலையா” – பாலகிருஷ்ணா கீதம்

“ஜெய் பாலையா” – பாலகிருஷ்ணா கீதம்

Songs, இது புதிது, காணொளிகள்
நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா, இயக்குநர் கோபிசந்த் மலினேனி, மைத்ரி மூவி மேக்கர்ஸ் கூட்டணியில் தயாராகி வரும் 'வீர சிம்ஹா ரெட்டி' எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற 'ஜெய் பாலையா..' எனத் தொடங்கும் முதல் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. இப்படத்தில், நந்தமூரி பாலகிருஷ்ணா திரையில் தோன்றிராத, மக்கள் விரும்பும் வேடத்தில் நடிக்கிறார்.இசையமைப்பாளர் எஸ். எஸ். தமன் இசையில் உருவாகி இருக்கும் 'ஜெய் பாலையா..' எனத் தொடங்கும் பாடல், அவரது ரசிகர்களுக்கான கீதமாக அமைந்திருக்கிறது. பாடலின் மெட்டு, பாடல் வரிகள், இசை, பின்னணிக் குரல் ஆகியவை பாலகிருஷ்ணாவின் புகழை மேலும் ஓங்கி ஒலிக்கச் செய்யும் வகையில் அமைந்திருக்கிறது. இந்தப் பாடலில் அவரது தோற்றம், நடை, நடனம் என அனைத்தும் ரசிகர்களைக் கவரும் விதம் உருவாக்கப்பட்டுள்ளது.'சரஸ்வதி புத்திர' ராம ஜோகையா சாஸ்திரியின் பாடல் வரிகளும், பாடகர் கரீமுல்லாவின் காந்த குரலும், 'ஜ...
சிரஞ்சீவியின் ‘பாஸ் பார்ட்டி’ பாடல்

சிரஞ்சீவியின் ‘பாஸ் பார்ட்டி’ பாடல்

Songs, அயல் சினிமா, இது புதிது, காணொளிகள், சினிமா
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் 'மெகா ஸ்டார்' சிரஞ்சீவியின் 'வால்டேர் வீரய்யா' படத்தில் இடம்பெற்ற 'பாஸ் பார்ட்டி..' எனத் தொடங்கும் இரவு விருந்துக்குரிய பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது. 'மெகா ஸ்டார்' சிரஞ்சீவி மற்றும் இயக்குநர் பாபி கொல்லி (கே.எஸ்.ரவீந்திரன்) இணைந்து உருவாக்கி வரும் 'வால்டேர் வீரய்யா' திரைப்படம் 2023 ஆம் ஆண்டில் வெளியாகிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படங்களில் ஒன்றான 'வால்டேர் வீரய்யா' படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.‌ வெகுஜன மக்களுக்கான திரைப்படம் என்பதால் இயக்குநர் பாபி கொல்லி, கூடுதல் கவனத்துடன் படைப்பை உருவாக்கி வருகிறார். இதுவரை யாரும் திரையில் கண்டிராத வகையில் தனது தேவதையைக...
“உச்சிமலை காத்தவராயன்” – சுயாதீன பாடல்

“உச்சிமலை காத்தவராயன்” – சுயாதீன பாடல்

Songs, காணொளிகள்
இசையுலகில் தன்னிகரற்றுத் திகழும் சரிகம, அதன் அசல் சுயாதீன பாடலான 'உச்சிமலை காத்தவராயன்..' எனும் பாடலின் காணொளியை வெளியிட்டிருக்கிறது. இசையமைப்பாளர் ஆனிவி இசையில் தயாராகி இருக்கும் சுயாதீன பாடல் 'உச்சிமலை காத்தவராயன்'. இந்தப் பாடலை இசையமைப்பாளரான ஆனிவி எழுத, இசையமைப்பாளரும், பாடகருமான ஜெஸ்ஸி கிப்ட்டுடன் இணைந்து ஆனிவி பாடியிருக்கிறார். ''பின்னால வந்த எவனும் வெளங்குனதில்ல..” எனத் தொடங்கும் இந்தப் பாடலில் நடிகர்கள் மா.கா.பா. ஆனந்த், ஆர்ஜே விஜய், நடிகை ஆஷ்னா ஜாவேரி ஆகியோர் நடனமாடி இருக்கிறார்கள். இந்தப் பாடலை டோங்கிலி ஜம்போ இயக்கியிருக்கிறார், இந்தப் பாடலுக்கான நடனத்தை நடன இயக்குநர் சாண்டி அமைக்க, மல்லிகா அர்ஜுன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். 'உச்சிமலை காத்தவராயன்' எனும் சுயாதீன பாடலை ரசிகர்களிடத்தில் அறிமுகப்படுத்திப் பிரபலப்படுத்த, இந்தக் குழு, வெகுஜன மக்களிடத்தில் ஏகோபித்த ஆதரவுடன் இன்றும் ...
‘காளிதாசன் சாகுந்தலா’ பாடல் – விஜயானந்த்

‘காளிதாசன் சாகுந்தலா’ பாடல் – விஜயானந்த்

Songs, அயல் சினிமா, காணொளிகள், சினிமா
கர்நாடகத்தைச் சார்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவித் தயாராகியிருக்கும் படம் 'விஜயானந்த்' ஆகும். 'ட்ரங்க்' எனும் ஹாரர் த்ரில்லர் படத்தை இயக்கிய இயக்குநர் ரிஷிகா சர்மா இயக்கத்தில் தயாராகியுள்ளது. இப்படத்தில் 'ட்ரங்க்' படப் புகழ் நடிகர் நிஹால் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் ஆனந்த் நாக், பாரத் பொப்பன்னா, ஸ்ரீ பிரகலாத், நடிகை வினயா பிரசாத், பிரகாஷ் பெலவாடி, வி. ரவிச்சந்திரன், அனீஷ் குருவில்லா, ரமேஷ் பட், தயாள் பத்மநாபன், ஷைனி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கீர்த்தன் பூஜாரி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்குக் கோபி சுந்தர் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் தமிழ்ப் பதிப்பு வசனத்தையும், பாடல்களையும் பாடலாசிரியர் மதுரகவி எழுதியிருக்கிறார். 'ஸ்கெட்ச்' படப் புகழ் ரவி வர்மா சண்டை காட்சிகளை அமைத்திருக்கிறார். சுயசரிதை படைப்பாகத் த...
சீதா ராமம் – காஷ்மீரின் பனி படர்ந்த பின்னணியில் காதல்

சீதா ராமம் – காஷ்மீரின் பனி படர்ந்த பின்னணியில் காதல்

Songs, காணொளிகள், சினிமா, திரைத் துளி
நடிகர் துல்கர் சல்மான் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'சீதா ராமம்' எனும் படத்தில் இடம்பெற்ற மூன்றாவது பாடல் வெளியாகி இருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டிருக்கிறார். மலையாள சினிமாவில் மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமா திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான். இவர் தெலுங்கின் முன்னணி இயக்குநரான ஹனு ராகவபுடி இயக்கத்தில் தயாராகி இருக்கும் 'சீதா ராமம்' எனும் படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை மிருணாள் தாகூர் நடித்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தானா அழுத்தமான வேடத்தில் நடித்துள்ளார். பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார். போர்க்களப் பின்னணியில் காதலை மையப்படுத்திய இந்தத் திரைப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் சார...
“எல்லாமே ஜாலி தான்” – கனா காணும் காலங்கள்

“எல்லாமே ஜாலி தான்” – கனா காணும் காலங்கள்

Songs, காணொளிகள்
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்கும் “கனா காணும் காலங்கள்” தொடருக்காக, இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் இசையமைப்பில், ‘எல்லாமே ஜாலி தான்’ எனும் சிறப்பு ஆன்த்தம் பாடல், சோனி மியூசிக் யூடுயூப் தளத்தில் வெளியாகியுள்ளது. ‘கனா காணும் காலங்கள்’ இப்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் பிரத்தியேகமாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புதிய எபிசோடுகளுடன் ஒளிப்பரப்பாகி வருகிறது. தலைமுறை தாண்டி ரசிகர்களை அசத்தி வரும், “கனா காணும் காலங்கள்” தொடரின் புதிய சீசன் ஒளிப்பரப்பாகி வருகிறது. இத்தொடர் அதன் ரசிகர்களுக்கு ஓர் ஆச்சரியமான இசை விருந்தை அளித்துள்ளது. இத்தொடருக்காக மகிழ்ச்சியான, வேடிக்கை நிறைந்த பள்ளி நினைவுகள் போற்றும் ‘எல்லாமே ஜாலி தான்’ எனும் தீம் பாடல் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இப்பாடலுக்கு சிறந்த இசை இயக்குநர்களில் ஒருவரான ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்தப் பாடலை ‘சூப்பர் சிங்கர்’ புகழ் ஆதித்யா ஆர்.கே பாடியுள்ளார், பிரபல...
‘மாய கங்கா..’ பாடல் | பனாரஸ்

‘மாய கங்கா..’ பாடல் | பனாரஸ்

Songs, காணொளிகள், சினிமா, திரைத் துளி
'கே ஜி எஃப்' படத்தின் வெற்றிக்குப் பிறகு கன்னட திரையுலகிலிருந்து அறிமுகமாகும் புதுமுக நடிகர் ஜையீத் கான், கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பனாரஸ்' படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியானது. இதனைத் தமிழ்த் திரையுலகின் மூத்த தயாரிப்பாளரும், நடிகர் விஷாலின் தந்தையுமான ஜி. கே. ரெட்டி வெளியிட்டார். கன்னடத் திரையுலகின் முன்னணி இயக்குநரான ஜெய தீர்த்தா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'பனாரஸ்’. இந்தப் படத்தில் புதுமுக நடிகர் ஜையீத் கான் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சோனல் மோன்டோரியோ நடித்திருக்கிறார். இவர்களுடன் மூத்த கன்னட நடிகரான தேவராஜ், அச்சுத்குமார், சுஜய் சாஸ்திரி, பரக்கத் அலி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அத்வைதா குருமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார். காதலை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்தp படத்தை என...
“துவா துவா” பாடல் | அமேசானின் ‘சுழல் – தி வோர்டெக்ஸ்’ தொடர்

“துவா துவா” பாடல் | அமேசானின் ‘சுழல் – தி வோர்டெக்ஸ்’ தொடர்

Songs, காணொளிகள், சினிமா, திரைச் செய்தி
அமேசான் பிரைம் வீடியோவின் தமிழ் ஒரிஜினல் தொடர் 'சுழல் தி வோர்டெக்ஸ்'-இற்காக சாம் சி.எஸ் இசையமைத்த 'துவா துவா..' எனத் தொடங்கும் பாடலில், பாடகர்கள் ஜோனிடா காந்தி, ஆண்ட்ரியா ஜெர்மியா மற்றும் 'ராப்பர்' அறிவு ஆகியோர் இணைந்து பணியாற்றியுள்ளனர். புஷ்கர் & காயத்ரி ஆகியோரால் எழுதி உருவாக்கப்பட்ட தொடர் 'சுழல் -தி வோர்டெக்ஸ்'. இதில் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி, ஆர். பார்த்திபன் ஆகியோர் நடித்துள்ளனர். வால்வாட்சர் பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குநர்கள் பிரம்மா மற்றும் அனுசரண் இயக்கத்தில் உருவான 'சுழல்- தி வோர்டெக்ஸ்' அமேசான் பிரைம் வீடியோவின் முதல் தமிழ் ஒரிஜினல் வலைதளத் தொடராகும். தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட இந்திய மொழிகளுடன், வெளிநாட்டு மொழிகளான பிரெஞ்சு, ஜெர்மன், இட்டாலியன், ஜப்பானியம், போலந்து, போர்த்துகீசியம், காஸ்டிலியன் ஸ்பானிஷ், லத்தீன் ஸ்பானிஷ்...