
புலி விமர்சனம்
மருதீரனின் காதலியைக் கடத்தி விடுகின்றனர் வேதாளபுரத்தின் வீரர்கள். பலம் பொருந்திய வேதாளர்களிடமிருந்து மருதீரன் தன் காதலியை எப்படி மீட்கிறார் என்பதுதான் படத்தின் கதை.
மருதீரன், புலிவேந்தனும் என இரண்டு வேடங்களில் விஜய். விஜய்யின் வழக்கமான நடிப்பில் மருதீரனும், ‘மக்களுக்காக சந்தோஷமா சாவேன்’ என அடித் தொண்டையில் கோவத்தை அடக்கிப் பேசும் விஜய்யின் வித்தியாசமான (!?) நடிப்பில் புலிவேந்தனும் திரையில் தோன்றுகின்றனர். ஸ்ருதிஹாசன் மழலையில் கொஞ்சிப் பேசி ஆடவும், ஹன்சிகா ஆட மட்டுமென நேர்ந்து விடப்பட்டுள்ளனர். ஜலதரங்கனாக வரும் சுதீப் மட்டும் கிடைத்த சின்னஞ்சிறு வாய்ப்பைத் தவற விடாமல் தன் நடிப்பால் ஈர்க்கிறார். ஸ்ரீதேவியோ ஒப்புக்கு வில்லியாக்கப்பட்டுள்ளார்.
ஒரு நீள ஃபேன்டஸி படத்துக்கு முயற்சி செய்துள்ளார் சிம்புதேவன். வைரநல்லூர் கிராமம், வேதாளபுரக் கோட்டை, குள்ள மனிதர்கள், ஒற்றைக் கண் மனிதன் எனப் பார்த்து...




