12-12-1950 விமர்சனம்
ரஜினி பிறந்த நாள் தான் படத்தின் தலைப்பு. தொண்ணூறுகளில் நாயகனாக நடித்த செல்வா தான் படத்தின் இயக்குநர் செல்வா. 1998இல் கோல்மால் எனும் படத்தை இயக்கிய பின், 19 வருடங்கள் கழித்து இரண்டாவது படத்தை இயக்கியுள்ளார். தன் பெயரையும் கபாலி செல்வா என மாற்றிக் கொண்டுள்ளார். அந்தளவிற்கு செல்வா ஒரு தீவிர ரஜினி ரசிகர்.
ரஜினி படத்துப் போஸ்டரை ஒருவன் கிழித்து விட, அதைத் தட்டிக் கேட்கச் செல்லும் ரஜினி ரசிகரான குங்ஃபூ மாஸ்டர் எதிர்பாராத விதமாக அவனைக் கொன்று விடுகிறார். சிறையில் இருக்கும் தனது மாஸ்டர், கபாலி படத்தை முதல் நாள் பார்க்கவேண்டுமென அவரால் வளர்க்கப்பட்ட மாணவர்கள் விரும்புகின்றனர். சிறையில் இருக்கும் மாஸ்டரை எப்படி அவரது மாணவர்கள் பரோல் எடுக்கின்றனர் என்பதும், கபாலி படத்தை மாஸ்டர் பார்த்தாரா இல்லையா என்பதும் தான் படத்தின் கதை.
மாஸ்டரின் மாணவர்களாக ரமேஷ் திலக், ஆதவன், அஜய் பிரசாத், பிரஷாந்த் கிருபாகர...