Shadow

Tag: 7 Screen Studio

“இலக்கை விட பயணமே முக்கியம்” – கவின் | Hi :) movie

“இலக்கை விட பயணமே முக்கியம்” – கவின் | Hi :) movie

சினிமா, திரைச் செய்தி
நயன்தாரா மற்றும் கவின் முதன்முறையாக இணைந்து நடித்த ஹாய் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில், வெற்றிகரமாகத் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. படத்திற்குக் கிடைத்து வரும் வரவேற்பு மற்றும் ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, படக்குழுவினர் பத்திரிகை மற்றும் ஊடகத் துறையினரைச் சந்தித்து தங்களது நன்றியைத் தெரிவித்தனர். இந்நிகழ்வில் பேசிய இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின், “இயக்குநர் விஷ்ணுவுடனும், நடிகர் கவினுடனும் இணைந்து பணியாற்றுவது எனக்கு இது நான்காவது படம். கவின் எனக்கு பள்ளிக் கால நண்பர். பள்ளி நாட்களில், ‘நீ நடிகராக வருவாய், நான் இசையமைப்பாளராக வருவேன்’ என்று நாங்கள் பேசிய நாட்களில் இருந்து இன்று இந்த தருணம் வரை வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எங்களது கனவு இன்று நனவாகியிருப்பதைப் போல் உணர்கிறேன். இந்தப் படம் நல்ல வெற்றியைப் பெற்றிருப்பது எனக்கு ...
Hi :) விமர்சனம்

Hi :) விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நீண்ட இடைவெளிக்குப் பிறகு, 'யாரடி நீ மோகினி' படப்பாணியில் ஒரு படம் தர முயற்சி செய்துள்ளது தயாரிப்பாளர் மற்றும் நடிகை நயன்தாராவின் குழு. ரஜினி ரசிகனாகவும், கமல் ரசிகையாகவும் நிறைய முரண்களோடு இருக்கும் கவினும் நயன்தாராவும் ஒன்று சேர்வது தான் கதையின் ஒருவரிக்கதை. காதல் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதை வாழ்வின் லட்சியமாகக் கொண்டுள்ள கவின் ஊரைவிட்டு ஓடி வந்துவிடுகிறார். இன்னொரு புறம் தன் வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் பிடிக்காமல் வீட்டை விட்டு ஓடிவருகிறார் நயன். இருவரும் சென்னையில் சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பைக் காலம் அல்ல, பழைய ஃபார்மட்டிலான திரைக்கதை வழங்குகிறது. அதன்பின் இந்த ஜோடி எப்படி ஒன்று சேர்ந்தார்கள் என்பது படத்தின் மீதிக்கதை. கதையின் நாயகியாக நயன்தாரா, பார்வையாளர்களுக்கு மிகவும் பரீச்சயமான அவரது வழக்கமான நடிப்பையே மீண்டும் அள்ளித் தெளித்துள்ளார். ஒருசில எமோஷ்னல் ஏரியாக்...
LIK | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி – ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

LIK | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி – ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Movie Posters, கேலரி, சினிமா
7 ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமார், இயக்குநர் விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் தயாராகும் புதிய படத்திற்கு “லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' (LIK) எனப் பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதனின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.இத்திரைப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, சீமான், கிரித்தி ஷெட்டி, யோகி பாபு, ஆனந்த் ராஜ், மாளவிகா, சுனில் ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் மேற்கொண்டிருக்கிறார்.‌ இன்றைய இளம் இணைய தலைமுறையினரின் காதலை நகைச்சுவையுடன் சொல்லும் படைப்பாகத் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்...