Shadow

Tag: 7 Star Boys review

7 ஸ்டார் பாய்ஸ் | 7 Star Boys review

7 ஸ்டார் பாய்ஸ் | 7 Star Boys review

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
‘ஆணப்பரம்பிலே வேர்ல்ட் கப் (Aanaparambile World Cup)’ எனும் மலையாளப் படம் 2022 இல் வெளியானது. அப்படத்தைச் சிறப்பாக மொழிமாற்றம் செய்துள்ளனர். கால்பந்து உலகக் கோப்பை 2018 இன் முதல் போட்டியில் தொடங்கும் கதை, கடைசிப் போட்டியில் நிறைவுறுகிறது. பன்னிரெண்டு வயது ஆகவில்லை என்று சொல்லி மைதானத்திற்குள் சிறுவர்களை அனுமதிக்க மறுக்கிறார் பயிற்சியாளர். அவர் பயிற்சியளிப்பதும் 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கே! பயிற்சியாளரால் துரத்தப்படும் ஏழு சிறுவர்களிலேயே இளையவனான 9 வயது உமர், ‘7 ஸ்டார் ஆத்தங்கரை டீம்’ என தங்கள் அணிக்குப் பெயர் சூட்டுகிறான். கிளப்பில் இருந்து தடை செய்யப்பட்ட இஸ்மாயில் எனும் இளைஞனைத் தங்கள் பயிற்சியாளராக இருக்கும்படி சிறுவர்கள் கேட்டுக் கொள்கின்றனர். இஸ்மாயிலோ, இந்தியக் கால்பந்து அணியில் ஜாம்பவனாகத் திகழ்ந்த I.M.விஜயனிடம் அழைத்துச் செல்கிறார். பன்னிரெண்டு நாட்களில் தொடங்கும் ‘கேரள பிள...