V1 – பயத்துடன் ஒரு புலனாய்வு
இருட்டைப் பார்த்து அஞ்சி நடுங்கும் பயத்திற்குப் பெயர் நிக்டோஃபோபியா (Nyctophobia) ஆகும். V1 படத்தின் நாயகன் இத்தகைய ஃபோபியாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
கதைப்படி, கதாநாயகன் காவல்துறையில் வேலைபார்க்கும் ஒரு போலீஸ் அதிகாரி. V1 என்ற எண்ணைக் கொண்ட வீட்டில் ஒரு கொலை நடக்கிறது. அந்தக் கொலை பற்றி விசாரிக்க வேண்டிய கட்டாயத்திற்குக் கதாநாயகன் உட்படுத்தப்படுகிறான். இருட்டைப் பார்த்து பயப்படும் கதாநாயகன் இந்தக் கொலைக்கான மர்மத்தையும் கொலைக்காரனையும் கண்டுப்பிடித்தாரா என்பதே "V1" படத்தின் கதை.
இன்வஸ்டிகேட்டிவ் த்ரில்லரான இப்படம் முழுக்கக் காட்சிக்குக் காட்சி விறுவிறுபும், புதுப்புது யுக்திகளையும் அமைத்து, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் பாவெல் நவகீதன். இவர் பிரபல திரைப்படங்களான வடசென்னை, பேரன்பு, மகளிர் மட்டும், குற்றம் கடிதல், மெட்ராஸ் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்து...