32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

V1 – பயத்துடன் ஒரு புலனாய்வு

Dinesh R சேலம் Published: 15/07/2019 2 நிமிட வாசிப்பு Updated: 16/08/2019 சினிமா
எழுத்து அளவு:

v1---investigate-thriller

இருட்டைப் பார்த்து அஞ்சி நடுங்கும் பயத்திற்குப் பெயர் நிக்டோஃபோபியா (Nyctophobia) ஆகும். V1 படத்தின் நாயகன் இத்தகைய ஃபோபியாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

கதைப்படி, கதாநாயகன் காவல்துறையில் வேலைபார்க்கும் ஒரு போலீஸ் அதிகாரி. V1 என்ற எண்ணைக் கொண்ட வீட்டில் ஒரு கொலை நடக்கிறது. அந்தக் கொலை பற்றி விசாரிக்க வேண்டிய கட்டாயத்திற்குக் கதாநாயகன் உட்படுத்தப்படுகிறான். இருட்டைப் பார்த்து பயப்படும் கதாநாயகன் இந்தக் கொலைக்கான மர்மத்தையும் கொலைக்காரனையும் கண்டுப்பிடித்தாரா என்பதே “V1” படத்தின் கதை.

இன்வஸ்டிகேட்டிவ் த்ரில்லரான இப்படம் முழுக்கக் காட்சிக்குக் காட்சி விறுவிறுபும், புதுப்புது யுக்திகளையும் அமைத்து, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் பாவெல் நவகீதன். இவர் பிரபல திரைப்படங்களான வடசென்னை, பேரன்பு, மகளிர் மட்டும், குற்றம் கடிதல், மெட்ராஸ் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார். மற்றும் இவர் விருதுகள் வாங்கிய பல குறும்படங்களை இயக்கியுள்ளார்.

பேரடைம் பிக்சர் ஹவுஸ் மற்றும் கலர்புல் பீட்டா மூவ்மென்ட் ஆகியோர் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர். பாசிடிவ் ப்ரிண்ட் ஸ்டுடியோஸ் சார்பாக L.சிந்தன் இப்படத்தை வெளியிடுகிறார்.

இப்படத்தின் கதாநாயகனாக ராம் அருண் காஸ்ட்ரோ நடித்துள்ளார். கதாநாயகியாக விஷ்ணு பிரியா நடித்துள்ளார். மேலும் லிஜேஷ், மைம் கோபி, காயத்ரி, லிங்கா, மோனிகா, மனிஷா ஜித் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

விரையில் வெளியாகவுள்ள “V1” படம் முழுவதும் சென்னையில் படமாக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்பக் கலைஞர்கள்:

>> தயாரிப்பு – அரவிந்த் தர்மராஜ், N.A.ராமு, சரவணன் பொன்ராஜ்
>> வெளியீடு – பாசிடிவ் ப்ரிண்ட் ஸ்டுடியோஸ் L.சிந்தன்
>> கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – பாவெல் நவகீதன்
>> ஒளிப்பதிவு – கிருஷ்ணா சேகர் T.S.
>> இசை – ரோனி ரப்ஹெல்
>> படத்தொகுப்பு – C.S.ப்ரேம் குமார்
>> கலை – VRK ரமேஷ்
>> SFX – ஒளி சவுண்ட் லாப்ஸ்
>> மிக்ஸிங் – M.R.ராஜகிருஷ்ணன்
>> மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.