Shadow

Tag: A.R.K.ராஜராஜா

நெஞ்சமெல்லாம் பல வண்ணம் – மகேஷ் பாபுவும் வெங்கடேஷும்

நெஞ்சமெல்லாம் பல வண்ணம் – மகேஷ் பாபுவும் வெங்கடேஷும்

சினிமா, திரைச் செய்தி
தெலுங்கில், 'சீதம்மா வாகித்யோ சிரிமல்லே செட்டு' என்ற படம் வசூலை அள்ளிக் குவித்தது. ஆந்திரத் திரையுலகினரே அதிசயித்த படமது. அப்படத்தைத் தமிழில், 'நெஞ்சமெல்லாம் பல வண்ணம்' என மொழிமாற்றம் செய்து மொயின் பேக் வழங்க, ரோல்ஸ் பிரைட் மீடியா ப்ரைவேட் லிமிடெட் படநிறுவனம் சார்பில் மெஹபு பாஷா தயாரித்துள்ளார்.  இந்தப் படத்தில் மகேஷ்பாபு, வெங்கடேஷ் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். கதாநாயகிகளாக அஞ்சலி , சமந்தா நடிக்கிறார்கள். மற்றும் பிரகாஷ்ராஜ், ராவ்ரமேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். >> இசை - மிக்கி ஜே.மேயர் >> பாடல் - அமான்ராஜா, சுதந்திரதாஸ், ஏக்நாத், உமாசுப்பிரமணியம், கார்கோ அருண்பாரதி, ராஜராஜா, ரா.சங்கர், பா.சபிக், தமிழ்ப்ரியன் நசிர். >> படத்தொகுப்பு - நிவேதா ஸ்டுடியோஸ் செல்வம் >> தயாரிப்பு - ரோல்ஸ் பிரைட் மீடியா(பி.லிட் ) மெஹபு பாஷா >> இயக்கம் - ஸ்ரீகாந்த் இவர் ...
செல்வந்தன் விமர்சனம்

செல்வந்தன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நேரடியாக தமிழில் வெளிவந்திருக்கும் மகேஷ் பாபுவின் முதல் திரைப்படம் இது. கோடீஸ்வரரான ரவிகாந்தின் ஒரே மகன் ஹர்ஷா. தனது சொந்த ஊரான தேவரக்கோட்டைக்குச் சென்று, அவ்வூரைத் தத்தெடுத்துக் கொள்கிறான். முன்பே அவ்வூரைத் தத்தெடுத்துக் கொண்ட மினிஸ்டர் வெங்கட் ரத்னமும், அவர் தம்பி சசியும், ஹர்ஷாவின் இந்தச் செயலால் கோபம் கொள்கின்றனர். கடைசியில் ஊர் யாருக்குச் சொந்தமானது என்பதுதான் படத்தின் கதை. ஹர்ஷாவாக மிகவும் அசால்ட்டாக நடித்துள்ளார் மகேஷ் பாபு. அவர் முகத்தில் ஒரு பேரமைதி நிலவுகிறது. ஆட்களைத் தூக்கிப் போட்டு துவம்சம் செய்யும்போது கூட அவர் முகத்தில் உக்கிரம் காணப்படுவதில்லை. அடியாட்கள் பவனி வர மாந்தோப்புக்குள் அவர் சைக்கிளில் நுழையும் காட்சி செம மாஸ். கோடீஸ்வரரின் மகனாகக் கச்சிதமாக கதாபாத்திரத்துக்குப் பொருந்துகிறார். தன் கிராமத்து மீது மிகவும் அபிமானமுள்ள சாருவாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். மிகவும் அழக...