அச்சம் என்பது மடமையடா விமர்சனம்
'கல்லூரி முடிச்சுட்டு வேலைக்குப் போகாதவனாகவும், தங்கையின் தோழியைக் காதலிப்பவனாகவுமே உங்க படத்தின் ஹீரோக்கள் இருக்காங்களே! உங்க டெம்ப்ளட் மாத்த மாட்டீங்களா?' என்ற கேள்விக்கு, "இதான் எனக்குத் தெரியும். அது நல்லாவும் வருது. சோ, நான் இதையே பண்றேன்" எனப் பதிலளித்தார் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன். மேலும், "ஒருத்தன் நல்லா தண்ணியடிச்சுட்டு, என்ன படம்னே தெரியாம தியேட்டர்க்குப் போயிட்டு, படம் ஆரம்பிச்ச 2 ஃப்ரேம்ல, முழுப் போதையில் இது கெளதம் படம்னு கண்டுபிடிக்கணும்" என்றும் தன் விருப்பத்தை வலியுறுத்தினார்.
எஸ்.டி.ஆர். மஞ்சிமா மோகனைக் காதலிக்கிறார். மஞ்சிமாவின் குடும்பத்தை ஒரு பெரும் பிரச்சனை சூழ்கிறது. காதலுக்காகவும், காதலிக்காகவும், அவரது குடும்பத்துக்காகவும் எந்த எல்லைக்குப் போகிறார் என்பதே படத்தின் ஒரு வரிக் கதை.
"முதல் பாதி ரொமான்ட்டிக்காக இருக்கும்; இரண்டாம் பாதியில் மாஸ் விஷயம்னு சொல...