Shadow

Tag: Actor Shaam

என் முதல் தீபாவளி – நடிகர் ஷாம்

என் முதல் தீபாவளி – நடிகர் ஷாம்

சினிமா, திரைத் துளி
திருமணமான புதுமணத் தம்பதிகளைப் போல திரையுலகக் கதாநாயகர்களும் தீபாவளியை மகிழ்ச்சியுடன் எதிர்கொள்வார்கள். அந்தத் தீபாவளிக்கு அவர்கள் நடித்த படம் வந்தால் அவர்களுக்கு அது தலை தீபாவளியைப் போன்ற மகிழ்ச்சி தரும். அந்த வகையில் எந்த ஆண்டும் இல்லாத உற்சாகமாக இந்த ஆண்டு தீபாவளியை எதிர்கொள்கிறார் நடிகர் ஷாம். அவரது உற்சாக எதிர்பார்ப்புக்குக் காரணம், அவர் நடித்த, 'ஸ்ட்ரெய்ட் ஃபார்வர்ட்' என்ற கன்னடப் படம் தீபாவளி அன்று வெளியாகிறது. இப்படத்தில் கதாநாயகனாக அங்கே முன்னணிக் கதாநாயகனான யஷ் நடித்துள்ளார். நாயகியாக வருகிறவர் ராதிகா பண்டிட். இதுவரை நாயகனாக நடித்து வந்த ஷாம், அப்படத்தில் எதிர் நாயகனாக நடித்திருக்கிறார். அதுவும் முழு நீள வில்லனாக நடித்துப் படத்தின் எடையில் சரி பாதியைச் சுமந்து இருக்கிறார். பட அனுபவம் பற்றி ஷாம் பேசத் தொடங்கும் போதே பேச்சில் உற்சாக வெள்ளம் அலையடிக்கிறது, "நான் '6' படம் வெளியான ...