Shadow

Tag: AGS 28 movie pooja

அர்ஜுன் – அபிராமி – ப்ரீத்தி முகுந்தன் | AGS 28

அர்ஜுன் – அபிராமி – ப்ரீத்தி முகுந்தன் | AGS 28

சினிமா, திரைத் துளி
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் 'கோட்', 'லவ் டுடே', 'டிராகன்' என மெகா வெற்றிப் படங்களைத் தொடர்ந்து, 28 ஆவது படைப்பாகக் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் உருவாகும் புதிய படம் பூஜையுடன் சென்னையில் துவங்கியது. 'ஆக்ஷன் கிங்' அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடிக்கும் இப்படத்தை, பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். அனைத்துத் தரப்பு ரசிகர்களும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் வகையிலான திரைப்படமாக இது அமையவுள்ளது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 'ஏஜிஎஸ் 28' என்று அழைக்கப்படும் இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் கிரியேட்டிவ் புரொடியுசராக அர்ச்சனா கல்பாத்தி, அசோசியேட் கிரியேட்டிவ் புரொடியுசராக ஐஸ்வர்யா கல்பாத்தி, நிர்வாக தயாரிப்பாளராக எஸ்.எம். வெங்கட் மாணிக்க...