Shadow

Tag: akkali tamil movie cinema review

அக்காலி விமர்சனம்

அக்காலி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சாத்தான் வழிபாட்டின் மூலமாக தங்களை சக்தி வாய்ந்த மனிதராக மாற்றிக் கொள்ள முயலும் கூட்டத்தைப் பற்றிய கதை.சாத்தான் வழிபாடு, ப்ளாக் மேஜிக் என வெகுஜன யதார்தத்திற்கு வெகு தொலைவில் இருக்கும் கதைக்களம். ஒரு கல்லறையில் புதைக்கப்பட்ட பிணங்கள் எல்லாம் காணாமல் போகின்றன என ஒரு வழக்கு வருகிறது. அந்த பிதை குழியில் போதைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கலாம் என்ற கணக்கில் அங்கு வேட்டைக்கு வரும் போலீஸாருக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. ஒரு கும்பல் பிணங்கள் மற்றும் மண்டை ஓட்டைக் கொண்டு விசித்திரமான பூஜை செய்து கொண்டிருக்க, அதே இரவில் அமானுஷ்யமாக நடந்து கொள்ளும் ஒரு இளம் பெண் கடத்தப்படுகிறாள். அந்த இளம் பெண் ஏன் கடத்தப்பட்டாள்; அந்த விசித்திர பூஜையில் ஈடுபட்ட கூட்டத்தினர் யார் என்பதை அந்த வழக்கை விசாரித்த போலீஸ் இன்ஸ்பெக்டரின் வாயிலாக கதை சொல்லும் பாணியில் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.9...