Shadow

Tag: Alien: Covenant

மீண்டும் ஏலியன்கள்

மீண்டும் ஏலியன்கள்

அயல் சினிமா, சினிமா, திரைச் செய்தி
இயக்குநர் ரிட்லீ ஸ்காட், 1979இல் தனது ஏலியன் படம் மூலம் முதல் விதையைப் போட்டார். ஏலியன்ஸ் (1986), ஏலியன் 3 (1992), ஏலியன்: ரெசரக்ஷன் (1997), ப்ரொமீத்தியஸ் (2012) என ஐந்து படங்களைத் தொடர்ந்து, ஏலியன் தொடர் படங்களில் ஆறாவதாக வரவிருக்கிறது ‘ஏலியன்: காவெனன்ட்’. Covenant என்றால் உடன்படிக்கை எனப் பொருளாகும்; ஆனால், படத்தில் அது ஒரு விண்கப்பலின் பெயர். முதல் படத்திற்குப் பிறகு, மீண்டும் அத்தொடரின் நான்காவது படமான ப்ரோமோத்தியஸை 33 வருடங்கள் கழித்து 2012இல் இயக்கினார் ரிட்லீ ஸ்காட். ஏலியன் சீரிஸில் அவர் இயக்கும் மூன்றாவது படம் காவெனன்ட்டாகும். இத்தொடரில் வரவுள்ள அடுத்த படமான ‘ஏலியன்: அவெக்கனிங்’கையும் அவரே இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ப்ரொமீத்தியஸ், காவெனன்ட், அவெக்கனிங் ஆகிய கடைசி மூன்று படங்களும், முதல் மூன்று படங்களின் ப்ரீக்வெல் (prequel) ஆகும். கதிர்வீச்சுப் புயலால் செயலிழுக்கும் க...