Shadow

Tag: All Pass movie

All Pass – வித்தியாசமான கோணத்தில் வடசென்னை

All Pass – வித்தியாசமான கோணத்தில் வடசென்னை

சினிமா, திரைச் செய்தி
மைதீன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆல் பாஸ்’ திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. வடசென்னை மக்களின் எதார்த்த வாழ்வியலை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தை ஒன்ஸ ஸ்டெப் என்டர்டெயின்மெண்ட் (One Step Entertainment) சார்பில் மோகனா. ஆர் தயாரித்துள்ளார்.கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை இயக்கியுள்ளார் மைதீன். ‘நிறங்கள் மூன்று’, ‘தருணம்’ உள்ளிட்ட படங்களில் நடித்த துஷ்யந்த் கதாநாயகனாக நடித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஜனனி, ‘லியோ’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில், இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இயக்குநர் மைதீன், "துஷ்யந்த்தை நடிக்க வைக்க அணுகியபோது, அவர், 'அப்பா தான் முடிவு சொல்வார்' என்றார். எனக்கு அப்போது ஜெயப்பிரகாஷ் சார் தான் அவரது அப்பா என்பது தெரியாது. ஜெயப்பிரகாஷ் சாரைச் சந்தித்து முழுக் கதையைச் சொன்னேன்....