Shadow

Tag: Anyas Tutorial review

ஆன்யா’ஸ் டுடோரியல் விமர்சனம்

ஆன்யா’ஸ் டுடோரியல் விமர்சனம்

OTT, Web Series
ஆஹா தமிழில், ஜூலை 1 அன்று வெளியாகியிருக்கும் அமானுஷ்ய இணையத்தொடர். மிகுந்த கொடுமையான பால்யத்தைக் கொண்ட லாவண்யா எனும் இளம்பெண், தன் பால்யம் ஏற்படுத்திய வடுவிலிருந்து மீள வீட்டை விட்டு வெளியேறுகிறாள். சிறுவயதில், தன் சகோதரியால் லாவணி என அழைக்கப்படுவதால், சகோதரியின் மீதுள்ள கோபத்தால் அப்பெயரை ஆன்யா என மாற்றிக் கொள்கிறார். பேயும் இல்ல பிசாசும் இல்ல என நம்ப விரும்பும் ஆன்யா, தனது இன்ஸ்டாகிராம சேனலான ‘ஆன்யா’ஸ் டுடோரியல்’-இல் ஒப்பனை பற்றிய காணொளி போடும் பொழுது, அவளது பின்னால் ஓர் உருவம் பதிவாகிறது. அந்த வீடியோ மிகவும் வைரலாக, ஆன்யா அதன் மூலமாகக் கிடைக்கும் பிரபல்யத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறாள். லாவணி எனும் ஆன்யாவாக நிவேதிதா சதீஷ் நடித்துள்ளார். ஆன்யாவின் மூத்த சகோதரி மதுவாக ரெஜினா கசாண்ட்ரா நடித்திருந்தாலும், நிவேதிதா தான் தொடரின் நாயகி. இருவருமே மிகச் சிறப்பாக நடித்துள்ளனர்...