அரளி விமர்சனம்
தலைப்பிலேயே குறியீடாகக் கதையைச் சொல்லிவிடுகின்றனர். பூக்களாகத் தோன்றும் அரளி, பூக்கள் உதிர்ந்து விஷமாய் எஞ்சுகிறது. எத்தனை பேருக்கு இது புரியுமென்ற கவலையில், இயக்குநர் படத்தலைப்பின் பொருளை க்ளைமேக்ஸில் வசனமாகவும் வைத்துள்ளார். அவரது இந்தக் கவலை படத்தின் தொடக்கக் காட்சியில் இருந்தே அப்பட்டமாய்த் தெரிகிறது. நேரடியாகக் கதைக்குள் சென்று, அது யாருக்கேனும் புரியாவிட்டால் என்ன செய்வதென அஞ்சி, ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் இன்னாரென்று வாய்ஸ்-ஓவரில் அறிமுகப்படுத்துகிறார்.
நாயகிக்கு, மனிதர்களை விடப் பணமே பிரதானமாய் உள்ளது. அதற்காக அவர் எந்த எல்லைக்குப் போகிறார் என்றும், அதனால் எத்தகைய பாதிப்புகள் விளைகிறது என்பதும்தான் படத்தின் கதை.
உள்ளபடிக்குக் கதை இடைவேளையின் பொழுது தான் தொடங்குகிறது. அதற்கு முன்பான திரைக்கதை, கதைக்கு உதவாத பில்டப்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது. கணேசன் எனும் பாத்திரத்திற்கு வேலை போகக...