Shadow

Tag: Arjuna

கர்ணன் | குலம் காட்டி கல்வி மறுக்கப்பட்டதா?

கர்ணன் | குலம் காட்டி கல்வி மறுக்கப்பட்டதா?

ஆன்‌மிகம்
கர்ணன் திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். “பயிற்சிக் காலம் தொட்டு எனது மாணவர்கள் அனைவரிலும் மேம்பட்டவனாக விளங்கியவன் அர்ஜ்ஜுனன் ஒருவனே. இன்று பலர் அறிய அதை நிரூபித்துவிட்டான். வில்லுக்கோர் விஜயன் என்ற சொல்லுக்கே பிறந்தவன் அவன்” என்று துரோணர் சான்று கூற. “பலே அர்ஜ்ஜுனா பலே! என் தம்பி எல்லோரினும் பெரியவன்” என்று தருமன் மேடையில் முழங்க. "சத்தம் வேண்டாம். இது வீண் இறுமாப்பு. மற்றவர்களைக் குறைத்துக் காட்டும் அப்படி ஒரு சொல்லை நான் அப்படியே ஏற்க முடியாது. இந்தப் போட்டியில் என் வில் திறமையைக் கண்ட பிறகு, ‘வில்லுக்கொருவன் எவன்?’ என்று சொல்லிக் காட்டுங்கள் " என்றவாறு அங்கே உள்ளே நுழைகிறான் கர்ணன். ‘யார் நீ? உன் தாய் தந்தையர் எவர்?’ என்ற கேள்வியோடு அவமானப்படுவதாகக் கர்ணன் அறிமுகம் ஆரம்பிக்கிறது. நாம் பச்சாதாபம் பொங்க கர்ணனை அணுகினோம். கர்ணனை குலத்தைச் சொல்லி, அவனை அவமதித்து அவனுக்கு ஆசாரியர்கள் ...