
பாதுகாப்பான பிரசவம் – RCOGஇன் மருத்துவக் கருத்தரங்கம்
யு.கே.வில் உள்ள 'தி ராயல் காலேஜ் ஆஃப் ஆப்ஸ்டட்ரிஷன் அண்ட் கைனகாலஜிஸ்ட் (RCOG)' என்பது உலகம் முழுவதும் உள்ள பெண்களின் உடல்நலத்தை மேம்படுத்த உருவாக்கப்பட்ட சர்வதேச நிறுவனமாகும். யு.கே.விற்கு வெளியே, மகப்பேறு மருத்துவர்கள், மகளிர் நோய் மருத்துவர்கள் என அதிக RCOG உறுப்பினர்களைக் கொண்ட நாடு இந்தியாவே! AICC ROCG இன் தெற்கு மண்டலத்து வருடாந்திர கருத்தரங்கு, ROCG தமிழ்நாடு கூட்டமைப்புடன் (ATNROCG) இணைந்து, ஜனவரி 20, 21 ஆகிய நாட்களில் சென்னையில் நிகழ்பெற்றது.
இந்தக் கருத்தரங்கில், சென்னையிலுள்ள சீதாபதி க்ளினிக் & ஹாஸ்பிட்டலின் சீனியர் OBGYN-ஆன மருத்துவர் உமா ராம் அவர்களை, AICC RCOG இன் அகில இந்தியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சீனியர் OBGYN-ஆன அப்போலோ மருத்துவமனையின் மருத்துவர் சுமனா மனோகர் அவர்கள் தெற்கு மண்டலத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார். RCOGஇன் தலைவரான மருத்துவர் Ranee ...


