
Balan: The Boy விமர்சனம்
மஞ்ஞுமள் பாய்ஸ் இயக்குநர் சிதம்பரத்தின் படமென்பதால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இப்படத்தின் கதையை, ரோமஞ்சம், ஆவேஷம் முதலிய படங்களை எழுதி இயக்கிய ஜித்து மாதவன் இயற்றியுள்ளார்.
சிறையில் இருந்து தனது மகனுடன் வெளியேறும் இளம் தாய், புதுப்புது அடையாளங்களுடன் தன் வசிப்பிடத்தை மாற்றிய வண்ணமே உள்ளார். ஒரு வீட்டில் பாட்டியம்மாவைப் பார்த்துக் கொள்ளும் தாதியாகச் செல்லும் இடத்தில், தனது பால்ய வயது மகன் பாலனை எதிர்பாராதவிதமாகப் பிரிந்து விடுகிறார். பதின் பருவத்தை அடையும் அந்த மகன், தனது தாயைத் தேடி வருகிறான். பாலன் தனது தாயைத் தேடிக் கண்டுபிடித்தானா இல்லையா என்பதே படத்தின் கதை. 'பாலன்: தி பாய்' எனும் தலைப்பு, ஒரு நிரந்தர பெயரற்ற பாலகன்/ பையன் என்பதைக் குறிக்கும் பொதுப்பெயராகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
பாட்டிம்மாவாக நடித்துள்ள டாலி ஜூனும், சிறுவனாக நடித்துள்ள K.R.ஆதிசேஷனும் அசத்...

