Shadow

Tag: Bayangaramana aalu movie review

பயங்கரமான ஆளு விமர்சனம்

பயங்கரமான ஆளு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இரட்டை வேடங்களில் நடித்துப் படத்தையும் இயக்கியுள்ளார் அரசர் ராஜா. சிவா ஒரு பத்திரிகையாளன், எசக்கி ஒரு குடிகாரன். பார்ப்பதற்கு இருவரும் ஒன்று போல் இருப்பார்கள். திடீரென சிவா காணாமல் போகிறான்; எசக்கியோ இறந்துவிடுகிறான். காணாமல் போன சிவா வேறொரு ஆளாக மீண்டு வருகிறான். சிவா எப்படி ஏன் பயங்கரமான ஆளாக மாறுகிறான் என்பதும், அவனை எப்படிக் கட்டுக்குள் கொண்டு வருகின்றனர் என்பதும்தான் படத்தின் கதை. படத்தின் படத்தொகுப்பை, சஸ்பென்ஸ் த்ரில்லருக்கு ஏற்ற வகையில் இன்னும் க்ரிஸ்ப்பாகக் கொடுத்திருக்கலாம். இப்பொழுது தொலைக்காட்சித் தொடர்களிலேயே போட்டி போட்டுக் கொண்டு மொத்த வித்தையையும் இறக்கும் காலமிது. நாயகனின் முக பாவனைகளில் ஏனோ தானோ எனக் கடமைக்கு உள்ளது. உளமொன்றி அவர் இன்னும் திறம்பட நடித்திருக்கலாம். நகைச்சுவைக்காக கஞ்சா கருப்புவும், போண்டா மணியும் திணிக்கப்பட்டுள்ளதால் கதையோட...