Shadow

Tag: Bethlehem Kudumba Unit review vimarsanam in Tamil

பெத்லகேம் குடும்ப யூனிட் | Bethlehem Kudumba Unit review

பெத்லகேம் குடும்ப யூனிட் | Bethlehem Kudumba Unit review

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
பிரேமலு படத்து இயக்குநர், மீண்டும் மமிதாவுடன் இணைந்து, ஒரு ஜாலியான நகைச்சுவையான ஃபீல்-குட் காதல் படத்தைக் கொடுத்துள்ளார். கேரளத்தின் சில சர்ச்களில், பிரார்த்தனை கூட்டங்கள், தான தர்மங்கள், சமூக தொண்டுகள் மற்றும் சர்ச்சின் நிர்வாகம் தொடர்பான விஷயங்களை ஒருங்கிணைக்க, தேவாலயத்தில் கூடும் குடும்பங்களைப் பிரிவுகளாகப் பிரித்து, அப்பிரிவுக்குப் புனிதர்களின் பெயரையோ அல்லது புனித இடத்தின் பெயரையோ சூட்டிக் குடும்ப யூனிட்களை உருவாக்குவார்கள். அது போன்ற ஒரு யூனிட்டான பெத்லகேம் எனும் குடும்ப யூனிட்டைச் சேர்ந்த ஜஸ்டினின் அண்டை வீட்டுக்கு ஆஷ்லி புதிதாகக் குடி வருவதில் இருந்து கதை தொடங்குகிறது. ஆஷ்லியை விட பத்து அல்லது பன்னிரெண்டு வயது மூத்தவர் ஜஸ்டின். ஆஷ்லியின் மனதில் ஒரு பூ மலர்வது போல், இலையிலிருந்து சொட்டும் மழைத்துளி போல அழகாய், இயல்பாய் ஜஸ்டினின் மீது காதல் அரும்புகிறது. நாளொரு மேனி, பொழுதொரு வண்ணம...