Shadow

Tag: Boney Kapoor

வலிமை | 500 மில்லியன் நிமிடங்கள் ஸ்ட்ரீமிங் பார்வை

வலிமை | 500 மில்லியன் நிமிடங்கள் ஸ்ட்ரீமிங் பார்வை

சினிமா, திரைத் துளி
தமிழகத்தின் முதன்மை நட்சத்திரங்களுள் ஒருவரான நடிகர் அஜித்குமார் நடிப்பில், வெளியான 2022 ஆம் ஆண்டின் மிகப் பெரிய பிளாக் பஸ்டர் திரைப்படமான, ‘வலிமை’ சமீபத்தில் ஜீ5 தளத்தில் வெளியிடப்பட்டது. தற்போது இப்படம் 500 மில்லியன் ஸ்ட்ரீமிங் பார்வை நிமிடங்களைக் கடந்து, உலகளவில் சாதனை படைத்துள்ளது. ஜீ5 தளத்தில், “வலிமை” திரைப்படம், தமிழ், கன்னடம்,தெலுங்கு, இந்தி ஆகிய நான்கு மொழிகளில் வெளியானது. தற்போது, மலையாளம் மொழியிலும் இப்படம் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழ் ஓடிடி இயங்குதளங்களின் மறுக்கமுடியாத வெற்றியாளரான ஜீ5, பல ஆண்டுகளாக அனைத்து வகையான கதைகள் மற்றும் மொழிகளில் எப்போதும் அருமையான திரைப்படங்களையும், அசல் உள்ளடக்கங்களையும் வழங்கி வருகிறது. நடிகர் அஜித் குமார் அவர்களைக் கௌரவப்படுத்தும் வகையில், ‘வலிமை’ திரைப்படம், உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் பிளாக்பஸ்டர் ஆனதைத் தொடர்ந்து, டிஜிட்டலில்,...
நேர்கொண்ட பார்வை விமர்சனம்

நேர்கொண்ட பார்வை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும், திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால் செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்; அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில் அவல மெய்திக் கலையின் றி வாழ்வதை உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம் உதய கன்ன உரைப்பது கேட்டிரோ! - புதுமைப் பெண், பாரதியார் மகாகவி இறந்தே 100 ஆண்டுகள் நிறைவடையப் போகின்றன. ஆனால், ஆண் வகுத்த வல்லாதிக்க விதிகளை மீறி, பாரதி கனவு கண்ட புதுமைப் பெண் என்பது இன்றும் எட்டாக்கனியாகவே உள்ளது. ‘நேர்கொண்ட பார்வை’ என்ற தலைப்பின் மூலம், இந்த இழிநிலையை மீண்டும் பொதுத்தளத்தில் ஓர் அழுத்தமான விவாதத்திற்கு உட்படுத்தியுள்ளார் இயக்குநர் வினோத். ‘அர்ஜுன் ரெட்டி’ போன்று ஆணாதிக்கத்தை ஹீரோயிசமாகப் பேசும் படத்தினை ரீமேக் செய்யும் சம காலத்தில், அஜித் போன்ற மாஸ் ஹீரோ, “பின்க் (Pink)” எனும் அற்புதமான ஹிந்திப் படத்...