
திறனாய்வுப் பார்வையில் ரஜினிகாந்த்
'திறனாய்வுப் பார்வையில் ரஜினிகாந்த்' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார் தொல்காப்பியன்.
"சரிகமபதநி" எனும் ஏழு ஸ்வரங்களைப் போல 7 தலைப்புகளில் தொல்காப்பியன், தன் மேன்மைத் தமிழில் , அவருடைய உளவியல் பார்வையைப் படரவிட்டு, சமூகம், கலை, பண்பாடு ஆகிய மூன்றையும் ஒன்றுக்கொன்று தொடர்புப்படுத்தி மிகச் சிறந்த ஆய்வுப் புத்தகத்தைப் பொருத்தமான நேரத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
இந்தப் புத்தகம் ஒரு 'சினிமா அறிவியல் (Cinema Science)' புத்தகம் என்ற வகைப்பாட்டில் முதன்மைப்படுத்தி வைக்கலாம். ஓர் எழுத்தாளன் எழுத்துக்களை எப்படிக் கோர்த்து எழுதவேண்டும் என்பதற்கு இந்தப் புத்தகமே சரியான முன்னுதாரணம். முனைவர் பட்டம் பெறுவதற்கான அனைத்துத் தகுதிகளையும் கொண்ட புத்தகமாகத் தயாரிக்கப்பட்டிருக்கிறது. அவ்வளவு அற்புதமான செய்திகளைத் தாங்கி நிற்கிறது.
சினிமாவைப் பற்றிய புரிதலும் ஆர்வமும், அதன் மீது கொண்ட காதலும் வெறியும், ஒரு சேரக...