சென்னை ராக்கர்ஸ் – செலிபிரிட்டி பாட்மிண்டன் லீக்
நடைபெற இருக்கும் 2016 ஆம் ஆண்டு செலிபிரிட்டி பாட்மிண்டன் லீக் ஆட்டத்தில், தமிழ்நாட்டின் சார்பில் விளையாட இருக்கும் அணி தான் 'சென்னை ராக்கர்ஸ்'. தமிழ்த் திரையுலகைச் சார்ந்த சிறந்த நட்சத்திரங்களை உள்ளடக்கியுள்ளது சென்னை ராக்கர்ஸ்.
இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களுக்காகப் பணிபுரிந்து வரும் 'டாட் காம் இன்போவே', 'அடத்தா', 'ஜிமாசா' மற்றும் 'கலாட்டா' ஆகிய நிறுவனங்களின் இயக்குநரும், தலைமை அதிகாரியுமான திரு. சி.ஆர்.வெங்கடேஷ் (சி.ஆர்.வி) இந்தச் சென்னை ராக்கர்ஸ் அணியின் உரிமையாளராகச் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
"தரமான பாட்மிண்டன் ஆட்டத்தைப் புதுமையான விதத்தில் சினிமா நட்சத்திரங்களுக்கு வழங்க வேண்டும் என்பதே எங்களின் முக்கிய குறிக்கோள். நட்சத்திரங்கள் தங்களின் பாட்மிண்டன் திறமையை வெளிப்படுத்த சிறந்ததொரு தளமாக இந்த 'செலிபிரிட்டி பாட்மிண்டன் லீக்’ போட்டி விளங்கும். அதுமட்டுமின்றி, பாட்மி...