Shadow

Tag: Central intelligence vimarsanam

சென்ட்ரல் இன்டெலிஜென்ஸ் விமர்சனம்

சென்ட்ரல் இன்டெலிஜென்ஸ் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
நட்பைக் கொண்டாடும் நகைச்சுவைத் திரைப்படம். 20 வருடங்களுக்குப் பின், ஃபேஸ்புக் மூலமாக தன் நண்பனைச் சந்திக்கிறான் கால்வின் ஜாய்னர். அடுத்த நாள் காலை சி.ஐ.ஏ. கால்வின் வீட்டு வாசலில் நிற்கிறது. அவன் சந்தித்த நண்பனான பாபி ஸ்டோன் ஒரு கொலை செய்து விட்டு, செயற்கைக் கோள் சம்பந்தமான குறியீட்டு இலக்கங்களை தீவிரவாதிகளிடம் விற்கப் பார்க்கும் மோசமான நபர் என சி.ஐ.ஏ.வால் கால்வினுக்குச் சொல்லப்படுகிறது. பாபியோ மீண்டும் கால்வினை அணுகி உதவி கேட்கிறான். கால்வின் சி.ஐ.ஏ. பக்கமா? நண்பன் பக்கமா? என்பதே படத்தின் கதை. கதை ஓர் ஆக்ஷன் படத்துக்கான கருவைக் கொண்டிருந்தாலும், நகைச்சுவையையே பிரதானமாகக் கொண்டுள்ளது. ஸ்டேண்ட்-அப் காமெடியனான கெவின் ஹார்ட், கால்வின் கதாபாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்துகிறார். தான் வாழும் வாழ்க்கை மீதுள்ள விரக்தியைக் காட்டுவதாகட்டும், நண்பனின் தொல்லை தாங்க முடியாமல் கழட்டி விடப் பார்ப்பதாக...