Shadow

Tag: Christina Kathirvelan movie review

கிறிஸ்டினா கதிர்வேலன் விமர்சனம் | Christina Kathirvelan review

கிறிஸ்டினா கதிர்வேலன் விமர்சனம் | Christina Kathirvelan review

சினிமா, திரை விமர்சனம்
கும்பகோணம் நிலப்பரப்பில் நடக்கும் கதை. கதையின் நாயகன் கெளசிக், நாயகி பிரதீபா இருவருக்கும் ஒருவர் மீது ஒவருக்கு சின்னதாக ஈர்ப்பு இருக்கிறது. ஆனாலும் இருவரும் காதலை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. பிரதீபா, தமது குடும்பச் சூழலுக்கு காதல் செட்டாகாது என முடிவு செய்து நாயகனை விட்டு விலகி வேறு ஒருவரைத் திருமணம் செய்யும் முடிவுக்கு வருகிறார். இச்சூழலில் கெளசிக்கின் நண்பனுக்கும், பிரதீபாவின் நண்பிக்கும் காதல் திருமணம் நடக்கிறது. இந்தக் காதல் திருமணத்தை ரிஜிஸ்டர் செய்வதில் ஒரு குளறுபடி ஏற்பட்டுவிடுகிறது. அந்தக் குளறுபடி என்ன என்பதும், அதன்பிறகு நாயகன் நாயகிக்கு காதல் மலர்ந்ததா என்பதுமே படத்தின் திரைக்கதையாக பயணிக்கிறது. பார்ப்பதற்குத் தென்மேற்கு பருவக்காற்று விஜய் சேதுபதி சாயலில் இருக்கிறார் நாயகன் கெளசிக். இயல்பான நடிப்பும் அவருக்கு கை கொடுக்கிறது. எமோஷ்னல் காட்சிகளில் மட்டும் கொஞ்சம் திண்டாடுகிறார்...