Shadow

Tag: Claire Foy

ஃபர்ஸ்ட் மேன் விமர்சனம்

ஃபர்ஸ்ட் மேன் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
"இது, மனிதனுக்கு ஒரு சின்ன அடி எடுத்து வைத்தல், மனித குலத்திற்கோ இது மிகப் பெரும் நகர்வு" என்ற வரலாற்று சிறப்பு மிக்க வாக்கியத்தை நிலவில் கால் வைக்கும்பொழுது சொன்னார் நீல் ஆர்ம்ஸ்ட்ராங். மனித குலம், பூமியில் நீடிக்கும் நாள் வரை அவரது பெயர் நினைவுகூரப்பட்டுக் கொண்டே இருக்கும். அவரது சரிதத்தை, 2005 ஆம் ஆண்டு, 'ஃபர்ஸ்ட் மேன்: தி லைஃப் ஆஃப் நீல் A.ஆர்ம்ஸ்ட்ராங்' எனும் நூலாகக் கொண்டு வந்தார் ஜேம்ஸ் R.ஹன்ஸென். அந்தப் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு, 'லா லா லேண்ட்' படத்தை இயக்கிய டேமியன் சஸெல், "ஃபர்ஸ்ட் மேன்" படத்தை இயக்கியுள்ளார். படத்தில், அமெரிக்கக் கொடியை நடுவது போல் காட்சியை வைக்கவில்லை இயக்குநர் டேமியன். அதனால் பலத்த சர்ச்சைகள் எழுந்தது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூட, "மிகவும் துரதிர்ஷ்டவசமானது இது. அமெரிக்காவின் சாதனையைச் சொல்வதைக் கூடப் படக்குழுவினர் சங்கடமாகக் கருதுகின்றனர். மிகவும் மோ...