
ஜீ.வி.பிரகாஷின் ஹாலிவுட் ஆல்பம்
சில வருடங்களுக்கு முன்பு ஹாலிவுட் என்பது நமக்கு எட்டாத கனியாக இருந்தது. ஒரு கட்டத்தில் தமிழ்த் திரையுலகினர் பலரும் தங்களுடைய திறமைகளை ஹாலிவுட் கலைஞர்களுக்கு நிகராக வளர்த்தனர். இப்போது இந்தியாவில் ஹாலிவுட் படங்களின் படப்பிடிப்பும், ஹாலிவுட் படத்தில் இந்தியக் கலைஞர்கள் பணிபுரிவது ரொம்பவே சாதாரணமாகிவிட்டது. அதே போல் ஆங்கிலத்தில் ஆல்பம் என்பது நாம் கேட்டுக் கொண்டு தான் இருந்தோம். எப்போது நம்ம ஆட்கள் இப்படியெல்லாம் ஆல்பம் தயாரித்து வெளியிடுவார்கள் என்ற ஏக்கம் இருந்தது.
அதையும் இப்போது ஒருவர் செய்து முடித்துள்ளார். ஆம், ஆங்கிலத்தில் ஆல்பம் ஒன்றைத் தயாரித்துள்ளார் ஜீ.வி.பிரகாஷ். 'அசுரன்', 'சூரரைப் போற்று' என இசைக்களத்தில் அசுரப் பாய்ச்சலில் இருக்கும் ஜீ.வி.பிரகாஷ், இப்போது இந்த ஆல்பத்தின் மூலம் உலக இசைக் கலைஞர்கள் மத்தியில் கால்பதித்து புதிய பயணத்தைத் தொடங்குகிறார்.
'கோல்ட் நைட்ஸ்' என்ற பெயரில்...