காமிக்ஸ்தான் போட்டியாளர்கள்
பகலில் ஐடி ஊழியராகவும், மாலையில் ஸ்டான்ட்-அப் காமெடியனாகவும் இருக்கும் மாயாண்டி கருணாநிதி, நகைச்சுவைத் துறையில் பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்று கனவு கண்டவர். பெங்களூருவைச் சேர்ந்த மாயாண்டி, மெதுவாக, உறுதியாக தனது லட்சியத்தை நோக்கி முன்னேறி வருகிறார்.
சென்னை, கோவை, ஹைதராபாத் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பல நகரங்களில் 300க்கும் அதிகமான நிகழ்ச்சிகளை மாயாண்டி நடத்தியிருக்கிறார். பல்வேறு கார்ப்ரேட் நிகழ்ச்சிகள், கல்லூரி விழாக்கள், பொது நிகழ்ச்சிகள் மற்றும் தனியார் பார்ட்டிகளிலும் மக்களைச் சிரிக்க வைத்துள்ளார்.
அடிப்படையில் மாயாண்டி ஒரு சோம்பேறி நபர். தற்போது, 'தள்ளிப் போடுவதை நிறுத்தி இன்றே கடின உழைப்பு செய்யுங்கள்' என்ற புத்தகத்தை எழுதி வருகிறார். 2055 ஆம் ஆண்டு இதைப் பிரசுரிக்கும் திட்டம் வைத்துள்ளார். இப்போதைக்கு இவரது திட்டம், அமேசான் ப்ரைம் வீடியோவின் காமிக்ஸ்தான் ‘செம காமெடிப்பா’ நிகழ...