Shadow

Tag: D16 movie review

துருவங்கள் பதினாறு விமர்சனம்

துருவங்கள் பதினாறு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
'நைட் நாஸ்டால்ஜியா (Knight Nostalgia)' என்பது கார்த்திக் நரேனின் தயாரிப்பு நிறுவனத்தின் பெயர். இப்பெயர், படத்தின் கதையோடு மிக நெருக்கமாகப் பொருந்துகிறது. விபத்து நடந்த இரவை நாஸ்டாலஜியா போல் தான் மனக்கண்ணில் கொண்டு வந்து அலசுகிறார் ரஹ்மான். ரஹ்மான் தான் இந்தப் படத்தில் வரும் knight எனக் கொள்ளலாம். கதை சொல்லும் பாணியும், தொழில்நுட்பத்தை நேர்த்தியாகக் கையாண்டுள்ள விதமும் மிகவும் ஃப்ரெஷாக உள்ளது. 21 வயது இயக்குநர் கார்த்திக் நரேன் பார்வையாளரை முழுவதும் தன் வயப்படுத்தி உள்ளார். பூங்காவின் அருகே ஒரு வாலிபர் கொல்லப்பட்டுக் கிடக்கிறார்; அப்பார்ட்மென்ட் ஒன்றில் வசிக்கும் இளம்பெண் மர்மமான முறையில் காணாமல் போகிறார். இவ்விரு வழக்கையும் கவனிக்கும் இன்ஸ்பெக்டர் ரஹ்மானின் ஒரு பகலிரவு விசாரணை தான் படத்தின் கதை. மிக மிகச் சாதாரணமான ஒரு கதை. கதையைக் கோர்வையாக்கி நேர்க்கோட்டில் பார்த்தால், எந்த முடிச்சுகளு...