#AskSRK! “ஜவான்”தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த ஷாருக்
ஷாருக்கானின் நடிப்பில் வெளியாகவிருக்கும், ஜவான் படத்திற்கான எதிர்பார்ப்பு, பார்வையாளர்களிடையே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதற்கான ஆதாரமாக சமீபத்திய #AskSRK அமர்வு, இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. ஷாருக்கான் தனது ரசிகர்களுடன் #AskSRK எனும் ஹேஸ்டேக்கில், ட்விட்டரில் தொடர்பு கொள்வதால், அவருடன் ரசிகர்கள் உரையாடுவது, உண்மையில் ஒரு பெரிய விருந்தாக அமைந்துள்ளது. மேலும் முன்னெப்போதும் இல்லாத அளவு ஷாருக்கானின் ஜவான் திரைப்பட எதிர்பார்ப்பு உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஷாருக்கானிடம் படத்தின் கதையைக் கேட்பது முதல், அவரது கதாபாத்திரம் குறித்து கேட்பது வரை, நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் படம் குறித்த தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். #AskSRK டிவிட்டர் அமர்வில் SRK தனது ரசிகர்களுக்கு பதிலளிக்கத் தொடங்கியவுடன், ரசிக...