எலக்ஷன் விமர்சனம்
நாயகர்களின் அரசியலை விட்டுவிட்டு நடுத்தர மக்களின் அரசியலை அச்சு அசலாகக் காட்டியிருக்கிறது இந்த எலக்ஷன் திரைப்படம். அரசியல், தேர்தல் போன்றவைகளை வெளியில் இருந்து பார்ப்பதற்கும், அதன் அங்கமாக மாறி அதனோடு பயணிப்பதற்குமான வித்தியாசங்களை ஆணித்தரமாகப் பேசியிருக்கிறது எலக்ஷன் திரைப்படம்.
ஜனநாயகத்தின் பலமே இந்தத் தேர்தல் முறையின் மூலம் தங்களைத் ஆளப் போகிறவர்களை மக்கள் தாங்களே தேர்ந்தெடுப்பது தான் என்று நாம் மார்தட்டிக் கொண்டாலும், அப்படி மக்களால் ஒவ்வொரு முறையும் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் யாராக இருக்கிறார்கள்? நல்லவன் என்றோ, நல்லது செய்பவன் என்கின்ற நம்பிக்கையைப் பெற்ற ஒருவனோ, இந்தத் தேர்தல் நடைமுறைகளின் வழி மக்களின் தலைவன் ஆகிவிட முடியுமோ என்று கேட்டால், அதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு என்பதே சத்தியமான பதில். அதைத்தான் இந்த எலக்ஷன் பேசி இருக்கிறது.
நாற்பது ஆண்டு காலம் கட்சிக்காக நாயாக ...