Shadow

Tag: Director R.V.Udhayakumar

“1000 கோடி சினிமா வர்த்தகம் முடக்கம்” – ஆர்.வி.உதயகுமார் ஆதங்கம்

“1000 கோடி சினிமா வர்த்தகம் முடக்கம்” – ஆர்.வி.உதயகுமார் ஆதங்கம்

சினிமா, திரைச் செய்தி
'தண்டகன்' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய ல்இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், "சினிமா இன்று எப்படி இருக்கிறது? இன்று ஒரு படம் எடுப்பது எவ்வளவு சிரமமாக இருக்கிறது? அதை வெளியிடுவது எவ்வளவு சிரமமாக இருக்கிறது? இன்று எல்லாப் படங்களும் வெளியிட முடிகிறதா? பல புதிய பெரிய படங்கள் வெளியாகின்றன. சிறிய படங்கள் வெளியாகின்றன. வசூல் தான் வரமாட்டேன் என்கிறது. அண்ணா, கலைஞர், புரட்சித்தலைவர், அம்மா என்று பல சினிமா ஆளுமைகள் இருந்த துறை இது. சினிமா அழியக்கூடாது. ஒரு டிக்கெட் 100 ரூபாய் விற்கிறது என்றால் தயாரிப்பாளர்களுக்கும் 30 ரூபாய். தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு 30 ரூபாய் என்றும் 40 ரூபாய் தியேட்டர்காரர்களுக்கும் சேருமாறு முறைப்படுத்த வேண்டும். ஒரு நடிகர் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார் என்றால் 10 லட்சத்தை முன்பணமாகக் கொடுத்து விட்டு 90 லட்சத்தை வசூலில் இருந்து ...