
இயக்குநர் சர்ஜுனின் எச்சரிக்கை
நல்ல படங்களைக் கண்டுபிடித்து அதை முறைப்படி மொத்தமாக வாங்கிச் சிறப்பாக வெளியிட்டு நல்ல விநியோகஸ்தர் என்று பெயரெடுத்த கிளாப் போர்டு புரொடக்ஷன்ஸ் வி.சத்யமூர்த்தியிடம் 'எச்சரிக்கை'யாகத் தனது படத்தை ஒப்படைத்துவிட்டது படக்குழு.
தப்பு தண்டா படத்தின் மூலம் திரைத்துறைக்கு நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் வி.சத்யமூர்த்தி. அதற்குப் பிறகு சுசீந்திரன் இயக்கிய 'நெஞ்சில் துணிவிருந்தால்', விஜய்சேதுபதி நடித்த 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' , விஜய் மில்டனின் 'கோலிசோடா 2' போன்ற படங்களை மொத்தமாக வாங்கி வெளியிட்ட சத்யமூர்த்தி தற்போது "எச்சரிக்கை - இது மனிதர்கள் நடமாடும் இடம் " படத்தைப் பார்த்துப் பாராட்டியதுடன் மொத்தமாக வாங்கி வெளியிடுகிறார். டைம்லைன் சினிமாஸ் மற்றும் சுந்தரம் அண்ணாமலை புரொடக்ஷன்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து இப் படத்தைத் தயாரித்துள்ளனர்.
இயக்குநரான சர்ஜுன் யூ-டியூப்பில் பிரபலமான மா,...