டோரா விமர்சனம்
கால் டேக்சி நிறுவனம் தொடங்குவதற்காக நயன்தாரா பழைய மாடல் கார் ஒன்றை வாங்குகிறார். அக்காரினுள் குடி கொண்டிருக்கும் டோரா எனும் நாயின் ஆவி சிலரைப் பழிவாங்குகிறது. அவர்கள் யார், அவர்களை நாய் ஏன் எப்படிப் பழிவாங்குகிறது என்பதுதான் படத்தின் கதை.
பவளக்கொடியாக நயன்தாரா நடித்துள்ளார். தூங்கி எழுந்தாலும் சரி, கொலையைப் பார்த்து மிரண்டு ஓடி வந்தாலும் சரி, முதல் ஃப்ரேமிலிருந்து கடைசி ஃப்ரேம் வரை, பளீச்சோ பளீச்சென இருக்கிறார். நாயகன் இல்லாததால் டூயட்டும் இல்லை ஆடைக்குறைப்பும் இல்லை. படத்தைச் சுமப்பது பளீச் நயன் மட்டுமே! நடிக்கக் கிடைத்த வாய்ப்பை மிக அழகாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார்.
நயன்தாராவின் தந்தையாகத் தம்பி ராமையா நடித்துள்ளார். கதைப்படி அவரது மனைவி ஓடி விட, நயன்தாராவிற்கு எல்லாமே தனது தந்தை தான். அவர்கள் இருவருக்கிடையில் இயல்பாய் இருக்க வேண்டிய பாசத்தைப் பார்வையாளர்களுக்குக் கடத்தத் தவறியுள்ள...