
IConS XII – மனநல மேம்பாட்டில் புதுமைகள் | SCARF India
ஸ்கிட்சோஃப்ரீனியா ஆராய்ச்சி அறக்கட்டளை (SCARF), ஆகஸ்ட் 20 முதல் ஆகஸ்ட் 22 வரை, சென்னையில் உள்ள தி சவேரா ஹோட்டலில், ஸ்கிdசோஃப்ரீனியா (மனச்சிதைவு) பற்றிய சர்வதேச மாநாட்டின் (IConS XII) 12வது பதிப்பின் நிகழ்வை நடத்தியது. இம்மாநாடு தொடங்கி 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையும் கொண்டாடினர். ஸ்கிட்சோஃப்ரீனியா ஆராய்ச்சி அறக்கட்டளையால் இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் IConS, ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள், மனநல நிபுணர்கள் மற்றும் வல்லுநர்களை ஒன்றிணைத்து, ஸ்கிட்சோஃப்ரீனியா மற்றும் மனநல ஆராய்ச்சி மற்றும் நடைமுறையில் ஏற்படும் புதிய முன்னேற்றங்களைப் பகிர்ந்துகொள்ளும் ஒரு சர்வதேச மேடையாகும். இந்த மாநாட்டில் உரைகள், கருத்தரங்குகள், பட்டறைகள் மற்றும் போஸ்டர் விளக்கக்காட்சிகள் இடம்பெற்றன.
"மனநல மேம்பாட்டில் புதுமைகள்: ஆராய்ச்சி மற்றும் நடைமுறை" என்ற கருப்பொருளில் இந்த ஆண்டு மாநாடு நடைபெற்றது. இதில், மாநாட்...


