Shadow

Tag: Enjoy Films

அங்கம்மாள் விமர்சனம் | Angammal review

அங்கம்மாள் விமர்சனம் | Angammal review

சினிமா, திரை விமர்சனம்
சாகித்திய அகாதெமி விருது வென்ற எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய கோடித்துணி என்ற சிறுகதையைத் தழுவி உருவாகியுள்ள திரைப்படம் ‘அங்கம்மாள்’ ஆகும். விபின் ராதாகிருஷ்ணன் இயக்க, கார்த்திக் சுப்பாராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்தப் படத்தில் அங்கம்மாள் என்ற மையக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் கீதா கைலாசம். கீதா கைலாசத்துக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் பரணி, இளைய மகன் சரண் ஆவர். அடிப்படையில் ரொம்பவே பிடிவாத குணத்தை உடைய கீதா கைலாசம் அழுத்தமான, தீர்க்கமான பெண்மணி. பரணி, அவரது மனைவி, சரண் என எல்லோருமே கீதா கைலாசத்தை எதிர்த்துப் பேசப் பயப்படுபவர்கள். பெரிதாகப் படிக்காத பரணி விவசாயம் செய்ய, இளைய மகன் சரணை மருத்துவம் படிக்க வைக்கிறார். நகரத்தில் ஒரு பணக்காரப் பெண்ணைக் காதலிக்க, பெண்ணின் தந்தையும் திருமணத்துக்கு ஒப்புக் கொள்கிறார். பெண் வீட்டாரைச் சந்திக்கும்போது தங்களைக் குறைவாக எடை...
கோடித்துணி – பெருமாள்முருகனின் கதை படமாகிறது

கோடித்துணி – பெருமாள்முருகனின் கதை படமாகிறது

சினிமா, திரைத் துளி
புகழ்பெற்ற தமிழாசிரியரும் எழுத்தாளருமான பெருமாள் முருகனின் ‘கோடித்துணி’ என்கிற சிறுகதை, திரைப்பட உருவாக்கம் பெறுகிறது. நடிகரும் பாடகருமான ஃபிரோஸ் ரஹீம் மற்றும் ஒளிப்பதிவாளர் அஞ்ஜோய் சாமுவேல் இருவரும் இணைந்து என்ஜாய் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கும் புதிய படத்தை விபின் ராதாகிருஷ்ணன் என்பவர் இயக்க உள்ளார். இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அஞ்ஜோய் சாமுவேல் இப்படத்தில் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றுகிறார். இந்தப் படத்திற்கான முதற்கட்ட பணிகள் பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கப்பட்ட நிலையில், மார்ச் மாத இறுதியில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் பிற தொழில்நுட்பக் கலைஞர்களின் விபரங்கள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கின்றன. தாங்கள் தயாரிக்கும் முதல் படத்திற்கே எழுத்தாளர் பெருமாள் முருகனின் கதை கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகப் படத்தின் தய...