Shadow

Tag: Entertainment Brothers

சவாரி விமர்சனம்

சவாரி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தொடர் கொலைகள் செய்யும் சைக்கோவும், அவனைத் தேடும் ஏ.சி.பி. சாலமனும் ஒரே காரில் சவாரி செய்கின்றனர். பின் என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை. படம் எந்தப் பூச்சுகளையும் நம்பாமல் முதல் ஃப்ரேமிலேயே கதையைத் தொடக்கி விடுகிறது. அங்கிருந்தே செழியனின் ஒளிப்பதிவு உங்களைக் கட்டிப் போட்டு விடுகிறது. எதையெல்லாம் ரசிகர்களால் யூகிக்க முடியுமோ, அதற்கு இடம் தராமல் இயக்குநரே முந்திக் கொண்டு அதைச் சொல்லி விடுகிறார். இடைவேளை வரை இப்படி விறுவிறுப்பாகச் செல்லும் சவாரி, அதன் பின் சற்றே நிதானமாய்ப் பயணிக்கிறது. ஏ.சி.பி. சாலமனாக புதுமுகம் பெனிட்டோ நடித்துள்ளார். படத்தின் பலம் அதன் கதாபாத்திரத் தேர்வுகளே! மிகக் குறைவான கதாபாத்திரங்களைக் கொண்டுள்ள படத்தில், நடிகர்கள் நிறைவாக நடிக்காவிட்டால் சோடை போய்விடும். இவ்விஷயத்தில் இயக்குநர் குகன் சென்னியப்பன் மிகத் தெளிவாக தியேட்டர் ஆர்டிஸ்ட்களையும், தேர்ந்த நடிகர்களையும் உ...
த்ரில்லிங்கான சவாரி.!

த்ரில்லிங்கான சவாரி.!

சினிமா, திரைத் துளி
த்ரில்லர் படங்கள் என்றாலே ரசிகர்களுக்கு என்றுமே ஆர்வம் இருக்கும். கொலைக்காரன் யாரென்று தெரியாமல், இவனாக இருக்குமோ, அவனாக இருக்குமோ என்று ரசிகர்களை யூகிக்க வைப்பதே இயக்குநர்களுக்கு பெரும் சவால். அத்தகைய படங்களில் ஒன்றுதான் சவாரி. ரசிகர்களை நாற்காலியின் நுனியில் உட்கார வைக்கும் தகுதி படைத்த படங்கள் என்றுமே வெற்றி பெரும். இந்தப் படத்தின் பலமாக இது அமையும். அறிமுக இயக்குநர் குகன் சென்னியப்பன் கூறும் போது, 'இன்றைய காலகட்டத்தில் நமக்கு எதிலும் வேகம், எல்லாவற்றிலும் வேகம். படம் பார்க்கும் ரசிகர்கள் கூட வேகமான தடதட என ஓடும் திரைக்கதை உள்ள படங்களைத்தான் ரசிக்கின்றனர். ரோடு த்ரில்லர் என்ற புதிய பாணியில் இந்தக் கதை எழுதப்பட்டு இருக்கிறது. புதிய தொழில் நுட்பக் கலைகளுடன் ஜொலிக்கும் இந்தப் படம் ரசிகர்களை நிச்சயம் நாற்காலியின் நுனியில் உட்கார வைக்கும' என்றார். அடுத்த மாதம் வெளி வர உள்ள 'சவாரி' உரிமைய...