Shadow

Tag: Eye donation awareness

அமலா பாலின் தொண்டு நிறுவனம்

அமலா பாலின் தொண்டு நிறுவனம்

சமூகம், சினிமா
பெரும்பாலான இளைஞர்களுக்கு உந்துதலாக இருக்கும் சினிமா நட்சத்திரங்களுக்கு நடிப்பது மட்டுமில்லாமல் இந்த இளைஞர்களை வழிப்படுத்தும் பொறுப்பும் உள்ளது. திரையைத் தாண்டி அவர்களது பொறுப்பு நீள்கிறது என்பதை நடிகை அமலா பால் தற்பொழுது நிரூபித்துள்ளார். கஷ்டப்படும் மக்களுக்குச் சேவை செய்வதற்காக, அமலா ஹோம் என்ற தொண்டு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார் அமலா பால். இந்த நிறுவனம் கண் தானம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் அதற்கான நிதியைத் திரட்டுவது போன்ற விஷயங்களில் ஈடுபடவுள்ளது. தனது தொண்டு நிறுவனம் குறித்து, ''அகர்வால் கண் மருத்துவமனைக்காக நான் ஒரு மேடைப்பேச்சுக்குத் தயார் செய்து கொண்டிருந்த பொழுது தான் சில முக்கியமான புள்ளிவிவரங்களை நான் கவனித்தேன். உலகம் முழுவதும் 30 மில்லியன் மக்கள் குருட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர் இந்தியர்கள். மேலும் அதிர்ச்சியூட்டும் தகவல் என்னவென்றால் இதில் 70...