Shadow

Tag: G Entertainers

சலசலக்கும் சண்முக பாண்டியன்

சலசலக்கும் சண்முக பாண்டியன்

சினிமா, திரைத் துளி
கிராமப்புறப் பின்னணியில் உருவாகி வரும் குடும்ப பொழுதுபோக்குப் படமான 'மித்ரன்' படத்திற்காகப் படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன். சமீபத்தில் படக்குழு, 'சல சல' என்ற துள்ளலான ஒரு பாடலைப் படமாக்கியிருக்கிறது. அது உருவாகியிருக்கும் விதம் அவர்களுக்கு மிகுந்த திருப்தியை அளித்துள்ளது. பொதுவாகப் போலீஸ் கதைகள் தீவிரத்தன்மையுடனும், தீவிரமான மோதல்கள் கொண்ட பின்னணியையும் கொண்டிருக்கும். அதில் துள்ளலான கொண்டாட்ட பாடல் எப்படி வைக்க முடியும்? அதைப் பற்றி இயக்குநர் ஜி.பூபாலன் கூறும்போது, “ஆரம்பத்தில் இருந்தே, இது ஒரு வணிக ரீதியான பொழுதுபோக்கு படம் என்று குறிப்பிடுகிறோம். படம் ஒரு ஊரைச் சேர்ந்த ஒரு இளைஞனைப் பற்றியது, அவர் ஒரு போலீஸ்காரராகி தனது பக்கத்துக்கு ஊருக்கு வந்து கடமையில் சேருகிறார். எனவே நாங்கள் காதல், ஆக்‌ஷன், டிராமா, நகைச்சுவை மற்றும் குறிப்பாக தாய் - ...