Shadow

Tag: Halloween 2018

ஹாலோவீன்: 40 ஆண்டுகளாகியும் தொடரும் ஓர் அச்சுறுத்தல்

ஹாலோவீன்: 40 ஆண்டுகளாகியும் தொடரும் ஓர் அச்சுறுத்தல்

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
‘ஹாலோவீன்’ என்ற பெயரில், 40 வருடங்களுக்கு முன் வந்த படத்தின் 11வது பாகம் இது. இந்தப் பாகத்தின் விசேஷம் என்னவென்றால், 1978இல் வந்த முதல் பாகத்தின் நேரடித் தொடர்ச்சியாக இப்படத்தை உருவாக்கியுள்ளனர். இடையில் வந்த மற்ற பாகங்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. 1978 இல் வந்த ஹாலோவீன் படத்தில், மைக்கேல் மையர்ஸ் என்பவன், ஹாலோவீன் இரவு அன்று குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும் பேபிசிட்டர்களைக் கொல்கிறான். அவனிடம் இருந்து தப்பிய லாரீ ஸ்ட்ரோடை, 40 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கொல்ல வருகிறான் மைக்கேல் மையர்ஸ். ஆனால், இம்முறை லாரீ அம்முகமூடி கொலைக்காரனை எதிர்கொள்ள தயாராகவே உள்ளாள். 105 நிமிடங்கள் கால அளவு கொண்ட படத்தின் முடிவில், மைக்கேல் மையர்ஸிடம் இருந்து லாரீ ஸ்ட்ரோட் தப்பினாளா என்பதற்கான விடையுடன் படடம் நிறைவுறுகிறது. ஒன்பது வருடங்களுக்குப் பின் இத்தொடரின் அடுத்த படம் வருவதாலும், முதல் பாகத்தின...