கண்ட நாள் முதல் பிரியாவின் ‘அனந்தம்’
ஜீ5 ஒரிஜினல் சீரீஸான “அனந்தம்” வரும் ஏப்ரல் 22 அன்று ஜீ5 தளத்தில் பிரத்தியேகமாக வெளியாகிறது.
'கண்ட நாள் முதல்', 'கண்ணாமூச்சி ஏனடா' முதலிய வெற்றிப் படங்களை இயக்கிய பிரியா V இயக்கத்தில், நடிகர் பிரகாஷ்ராஜ் நடிப்பில், எட்டு அத்தியாயங்கள் கொண்ட ZEE5 ஒரிஜினல் சீரீஸாக உருவாகியுள்ளது “அனந்தம்."
இந்தத் தொடரில் பிரகாஷ்ராஜ் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார், மேலும் அரவிந்த் சுந்தர், சம்பத், விவேக் பிரசன்னா, வினோத் கிஷன், மற்றும் ஜான் விஜய், விவேக் ராஜ்கோபால், இந்திரஜா, சம்யுக்தா, அஞ்சலி ராவ் மற்றும் மிர்னா மேனன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
அனந்தம் ZEE5 ஒரிஜினல் சீரீஸ் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் பிரியா V, "வனவாசம் முடித்து மிக நீண்ட இடைவேளைக்கு பிறகு உங்களைச் சந்திக்கிறேன். முரளி சார், கௌசிக் இருவருக்கும் நன்றி. 'கண்ட நாள் முதல்' படத்தில் இருந்தது போல் ஒரு சிறு நம்பிக்கையில் தான் இத...