Shadow

Tag: HK15

HK 15 | லிஃப்ட் இயக்குநருடன் இணையும் ஹரீஷ் கல்யாண்

HK 15 | லிஃப்ட் இயக்குநருடன் இணையும் ஹரீஷ் கல்யாண்

இது புதிது
இடா (IDAA) ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் வினீத் வரபிரசாத் இயக்கத்தில், நடிகர் ஹரீஷ் கல்யாணின் 15 ஆவது படமாக உருவாகும் #HK15 படத்தின் அதிராகப்பூர்வ அறிவிப்பு போஸ்டர் தமிழ்ப் புத்தாண்டையொட்டி வெளியாகியுள்ளது.வித்தியாசமான களங்களில் தனித்துவமான கதாபத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஹரீஷ் கல்யாண், லப்பர் பந்து படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட ஆக்ஷன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ளார். வடசென்னை வாழ் இளைஞர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி ஹைப்பர் கான்செப்டில், வித்தியாசமான ஆக்சன் த்ரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. லிஃப்ட் படம் மூலம் கவனம் ஈர்த்த, இயக்குநர் வினீத் வரபிரசாத் இப்படத்தை இயக்கியுள்ளார். இரத்தம் தெறிக்க ஹரீஷ் கல்யாணின் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் விதமாகப் போஸ்டரை வடிவமைத்துள்ளனர்...