இது நம்ம ஆளு விமர்சனம்
சிவாவிற்கு காதல் என்றால் ரொம்ப பிடிக்கும். ஆனால், அவனால் ‘தன்னுடைய ஆள்’ எனக் காதலிக்க ஒருவரையும் தீர்மானம் செய்து கொள்ள முடியவில்லை. அவரது காதலின் ஸ்டார்ட்டிங் நல்லாயிருந்தாலும் ஃபினிஷிங்கில் சிக்கலாகிக் கொண்டேயிருக்கிறது. சிவா தன்னுடைய ஆளைக் கண்டடைந்தானா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.
‘எனக்கு லவ் பண்றதுன்னா ரொம்ப பிடிக்கும்’ என்ற ஒற்றைப் பரிமாணக் கதைக் கருவை எடுத்துக் கொண்டு பேசிப் பேசியே மாய்கின்றனர் கதாபாத்திரங்கள்.
சூரி: அந்தப் பொண்ண பார்த்ததுமே உனக்குப் புடிச்சிப் போனதுக்கு என்ன காரணம் தெரியுமா?
சிம்பு: என்ன?
சூரி: ஒன்னு உன்னோட பருவம். இன்னொன்னு அந்த பொண்ணோட புருவம்.
நயன்தாராவுக்கும் ஆண்ட்ரியாவுக்கும் ஒரே மாதிரியான புருவங்கள் என்பதால் நயன்தாராவைப் பார்த்ததுமே சிலம்பரசனுக்குப் பிடித்துப் போய் விடுகிறதாம். அப்படின்னு சூரி சொல்றார். இப்படி இலக்கற்ற கதைப் போக்கினாலும், கடியான வசன...