
Indian Film Market – இந்திய சினிமாவின் எதிர்காலம்
இந்தியத் திரைப்படத் துறையின் முழுமையான தேவைகளை ஒரே இடத்தில் பூர்த்திச் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் புரட்சிகரமான புதிய தளமாக இந்தியன் ஃபிலிம் மார்க்கெட் (Indian Film Market) தளம் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகியுள்ளது.
பல தசாப்தங்களாகப் படைப்பிலிருந்து திரைக்கு, அதைத்தாண்டி திரைப்படத் துறைக்கு ஆதரவாக ஒருங்கிணைந்த ஒரு சூழலை உருவாக்க வேண்டிய அவசியம் இருந்து வந்தது. அந்த வெற்றிடத்தை நிரப்பும் வகையில் தான் இந்தியன் ஃபிலிம் மார்க்கெட் தளம் உருவாகியுள்ளது.
இந்த முன்னோடியான முயற்சியின் தலைமைச் சிந்தனையாளர் திரு. கண்ணன் (நிறுவனர், இந்தியன் ஃபிலிம் மார்க்கெட்) தயாரிப்பு, விநியோகம், திரையரங்க மேலாண்மை, மேலும் முன்னணி மீடியா நிறுவனங்களில் 28 ஆண்டுகால தலைமைப் பொறுப்புகளில் அனுபவம் பெற்றவர். இந்தியத் திரைப்படத் துறையின் சவால்களையும், அதில் உள்ள வாய்ப்புகளையும் ஆழமாகப் ...


