இரவின் நிழல் விமர்சனம்
இரவை விடவும், இரவின் நிழலை விடவும், அடர்த்தியான இருண்மையைக் கொண்டுள்ளது 'இரவின் நிழல்' திரைப்படம். "இது மென்மையான மனம் கொண்டோருக்கான படமில்லை" என மேக்கிங் வீடியோவில் எச்சரிக்கிறார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். 92 நிமிட கால அளவைக் கொண்ட படம் தொடங்குவதற்கு முன், 30 நிமிட மேக்கிங் வீடியோ போடுகிறார் பார்த்திபன் ராதாகிருஷ்ணன். உலகத்திலேயே முதல் முறையாக சிங்கிள் ஷாட் நான் லீனியர் படம் என்ற முறையில் தமிழர்கள் எல்லாம் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம். புதிய முயற்சிக்கான தேடலோடு ஓடும் பார்த்திபன் இராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள். 💐
Start, Camera, Action, Hospital என்று உடல் அங்கங்களை உடைத்துக் கொள்ளும் ஜாக்கி சான், தன் படங்களின் முடிவில் ப்ளூப்பர்ஸை ஜாலியாக ரசிக்கும்படி வைத்திருப்பார். பிறகு, வெற்றி பெற்ற படத்தின் மேக்கிங் வீடியோவைத் தனியாக இணையத்தில் வெளியிடும் வழக்கம் வந்தது. எங்கும் எதிலும் எப்ப...