இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் விமர்சனம்
கோவக்கார இளைஞனான கெளதம் மீது தாராவிற்குக் காதல் மலர்கிறது. அந்தக் காதல் என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை.
ஹரிஷ் கல்யாண் அருகில் ஒரு கதாநாயகி மிளிர்வது என்பது கொஞ்சம் சிரமமான காரியம்தான். பியார் பிரேமா காதல் படத்திலும் கூட ரெய்ஸாவைப் பின்னுக்குத் தள்ளி தன் பிரகாசமான ஸ்க்ரீன் ப்ரெசன்ஸை வெளிப்படுத்தியிருப்பார் ஹரிஷ். இப்படத்திலும், கதாநாயகியான ஷில்பா மஞ்சுநாத்க்கு அதே பிரச்சனைதான். அவரது நடிப்பாலும், ஃப்ரேமில் தனியாகத் தெரியும்பொழுது ஈர்த்தாலும், நாயகனுடனான க்ளோஸ்-அப் காட்சியில் சோடை போகிறார். மஞ்சுளாவைக் கல்லூரி மாணவியாகவும் ஏற்றுக் கொள்ளச் சிரமமாக உள்ளது.
எனினும், இதய ராணியாக அவரது நடிப்பு மிகவும் அற்புதமாக உள்ளது. முடிவெடுக்க முடியாமல் குழம்பி, அக்குழப்பத்தை நாயகன் மேல் கோபமாகக் காட்டும் காட்சி என தன் கதாபாத்திரத்தை உள்வாங்கி அழகாக நடித்துள்ளார். படத்தின் பலமே, பிரதான பாத்திரங்களின் ...