Shadow

Tag: Jackie Chan

ஜாக்கி சானின் ப்ளீடிங் ஸ்டீல்

ஜாக்கி சானின் ப்ளீடிங் ஸ்டீல்

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
ஜாக்கி சான் நடிப்பில் உருவான “ப்ளீடிங் ஸ்டீல்” ஒரு சயின்ஸ்-ஃபிக்ஷன் த்ரில்லர் படம். இயந்திர இதயத்தோடு வாழும் ஒரு முன்னாள் கடற்படை வீரனைப் பற்றி ஒரு புத்தகம் எழுதுகிறார் ஓர் எழுத்தாளர். அந்தக் கதையை அவர் எங்கிருந்து எடுத்தார் எனக் கேட்டு ஒரு கும்பலும், ஜாக்கி சானும் அவரைத் தேடி வருகின்றனர். அந்த எழுத்தாளர் இறந்து விட, இயந்திர இதயம் கொண்டவனின் கும்பலிடம் இருந்து ஜாக்கி சான் எப்படித் தப்பிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை. ஏஜென்ட் லின் டாங்காக ஆக்ஷனிலும், ஒரு பெண் குழந்தையின் தந்தையாகச் சென்ட்டிமென்டிலும் கலக்கியுள்ளார் ஜாக்கி சான். சீனாவில் போன வருடம் வெளியான இப்படத்தினை, விரைவில் ஹன்சா பிக்சர்ஸ் வெளியிடவுள்ளனர்....
ஜாக்கி சானின் தி ஃபாரீனர்

ஜாக்கி சானின் தி ஃபாரீனர்

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
ஏழு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஜாக்கி சானின் ஆக்ஷன் படம் ஒன்று ஹாலிவுட்டில் வெளியாகியுள்ளது. படத்தின் பெயர் ‘தி ஃபாரீனர்’. இப்படத்தின் மற்றொரு சிறப்பம்சம், இப்படத்தில் ஜாக்கி சானுடன் இணைந்து, 007 ஆகக் கலக்கிய பியர்ஸ் பிராஸ்னனும் நடித்துள்ளார். ஸ்டீஃபன் லெதர் எழுதிய 'தி சைனா மேன்' எனும் நாவலைத் தழுவித் திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குநர் டேவிட் மார்கோனி. பிரபல ஹாலிவுட் இயக்குநர் இயக்குநர் மார்டின் கேம்பெல் படத்தை இயக்கியுள்ளார். 2006இல் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற 'கேசினோ ராயல்' படத்தை இயக்கியவர் கேம்பெல் என்பது குறிப்பிடத்தக்கது. பியார்ஸ் பிராஸ்னன் 007 ஆக நடித்த 'கோல்டன் ஐ' படத்தை இயக்கியவரும் இவரே! 22 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் பியர்ஸ் பிராஸ்னனுடன் இணைகிறார். க்வான் (Quan) என்பவர் லண்டனைச் சேர்ந்த தொலிழதிபர். அவரது பதின் வயது மகள் ஒரு வெடி விபத்தில் இறந்து விடுகிறாள். அரசியல் கா...