Shadow

ஜாக்கி சானின் தி ஃபாரீனர்

The Foreigner

ஏழு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஜாக்கி சானின் ஆக்ஷன் படம் ஒன்று ஹாலிவுட்டில் வெளியாகியுள்ளது. படத்தின் பெயர் ‘தி ஃபாரீனர்’. இப்படத்தின் மற்றொரு சிறப்பம்சம், இப்படத்தில் ஜாக்கி சானுடன் இணைந்து, 007 ஆகக் கலக்கிய பியர்ஸ் பிராஸ்னனும் நடித்துள்ளார்.

ஸ்டீஃபன் லெதர் எழுதிய ‘தி சைனா மேன்’ எனும் நாவலைத் தழுவித் திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குநர் டேவிட் மார்கோனி. பிரபல ஹாலிவுட் இயக்குநர் இயக்குநர் மார்டின் கேம்பெல் படத்தை இயக்கியுள்ளார். 2006இல் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற ‘கேசினோ ராயல்’ படத்தை இயக்கியவர் கேம்பெல் என்பது குறிப்பிடத்தக்கது. பியார்ஸ் பிராஸ்னன் 007 ஆக நடித்த ‘கோல்டன் ஐ’ படத்தை இயக்கியவரும் இவரே! 22 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் பியர்ஸ் பிராஸ்னனுடன் இணைகிறார்.

க்வான் (Quan) என்பவர் லண்டனைச் சேர்ந்த தொலிழதிபர். அவரது பதின் வயது மகள் ஒரு வெடி விபத்தில் இறந்து விடுகிறாள். அரசியல் காரணங்களுக்காக நிகழ்த்தப்பட்ட தீவிரவாதச் செயல் தான் வெடி விபத்துக்குக் காரணம் என அறிய வரும் ஜாக்கி சான் (க்வான்), தன் மகளின் மறணத்திற்குப் பழி வாங்கக் களத்தில் இறங்குகிறார். படம் நெடுகேவும் ஆக்ஷன் காட்சிகளால் தான் நிறைந்துள்ளது. சமீப காலமாக ஆக்ஷன் காட்சிகளில் நடிக்காமல் இருந்த ஜாக்கி சான், இப்படம் மூலம் மீண்டும் தன் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த உள்ளார்.

35 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் படம் உருவாகியுள்ளது. பிரிட்டன் மற்றும் சீன தயாரிப்பான இப்படத்தில், ஜாக்கி சானும் இணை தயாரிப்பாளராகக் கூட்டுச் சேர்ந்துள்ளார். படத்தின் கதை ஐரிஷ் அரசியல் பின்னணியோடு இயைந்து இருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது.