பெல்ஃபாஸ்ட் டூ ஐஸ்லாந்து – இயற்கையின் பேரழகு
ஒரு வசீகரமான திருடன் எட்கினும், அவனது சகாக்களும், தொலைந்து போன நினைவுச்சின்னத்தை மீட்டெடுக்க ஒரு திருட்டை மேற்கொள்கின்றனர். நண்பரகளாக இருந்தவரின் துரோகத்தால், அந்தத் திருட்டின் பொழுது சிக்கிக் கொள்கின்றனர் எட்கினும், அவனது பலசாலியான தோழியான கோல்காவும். மேசையில் விளையாடப்படும் ‘டன்ஜியன்ஸ் & டிராகன்ஸ்’ எனும் உள்ளரங்க விளையாட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது படத்தின் திரைக்கதை.
பகடை உருட்டி விளையாடப்படும் விளையாட்டுகளின் அப்பாடக்கர் என ‘டன்ஜன்ஸ் & ட்ராகன்ஸ்’ விளையாட்டைச் சொல்லலாம். இந்த விளையாட்டைத் திரைக்குக் கொண்டு வருவது என்பது மிகவும் சவாலான விஷயம். சாகசமும் ஆக்ஷனும் நகைச்சுவையும் பின்னிப் பிணைந்த திரைக்கதையாக அமைக்க வேண்டுமென்பது தயாரிப்பாளர் ஜெரெமி லாட்சம் அவர்களின் விருப்பம். ஐம்பது வருட பாரம்பரியம் கொண்ட மரபுக்கதைகளைச் சாகசம் குறையாமல் திரைக்கதையாக்க, இரட்டை இயக...